Advertisment

‘கைவசம் தொழில் இருக்கு’; நடிகை கனிகா ஆட்டோ ஓட்டும் வைரல் வீடியோ

ஆட்டோ ஓட்டி அசத்தும் எதிர்நீச்சல் ஈஸ்வரி; கைவசம் தொழில் இருக்கு கேப்ஷனுடன் கனிகா இன்ஸ்டா வீடியோ இணையத்தில் வைரல்

author-image
WebDesk
New Update
kaniha auto

ஆட்டோ ஓட்டி அசத்தும் எதிர்நீச்சல் ஈஸ்வரி; கைவசம் தொழில் இருக்கு கேப்ஷனுடன் கனிகா இன்ஸ்டா வீடியோ இணையத்தில் வைரல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கைவசம் தொழில் இருக்கு என்ற கேப்ஷனுடன் நடிகை கனிகா ஆட்டோ ஓட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் சுசி கணேசன் இயக்கிய ஃபைவ் ஸ்டார்திரைப்படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கனிகா. அதைத் தொடர்ந்து சேரனின் இயக்கத்தில் ஆட்டோகிராஃப்திரைப்படத்திலும், நடிகர் அஜித்துடன் இணைந்து வரலாறுதிரைப்படத்திலும் நடித்து ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பைப் பெற்றார். தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு என்று தென்னிந்திய சினிமாவில் ஹீரோயினாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார் கனிகா. நடிப்பைத் தவிர டப்பிங்கிலும் நடிகை கனிகா கவனம் செலுத்தி வருகிறார்.

திரைத்துறை மட்டுமல்லாது சீரியலும் நடிகை கனிகா நடித்து வருகிறார். தற்போது சன் டிவியில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் எதிர்நீச்சல் சீரியலில் கனிகா நடித்து வருகிறார். இதில் ஆதிகுணசேகரன் எனும் கதாபாத்திரத்திற்கு மனைவியாக ஈஸ்வரி எனும் கேரக்டரில் கனிகா நடித்து வருகிறார்.

எதிர்நீச்சல் சீரியல் மூலம் கனிகாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமூகவலைதளங்களிலும் ஆக்டிவ்வாக இருந்து வரும் கனிகா, அவ்வப்போது லேட்டஸ்ட் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டும் வருகிறார். இந்த நிலையில் கனிகா இலங்கைக்கு சென்றுள்ளார். அங்கு ஆட்டோ ஓட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ”கைவசம் ஒரு தொழில் இருக்கு, ஆட்டோ ஓட்டக் கற்றுக் கொள்வது எவ்வளவு வேடிக்கையாக இருக்கிறது, இந்த ஆட்டோ எங்களின் இலங்கை பயணத்தில் வாடகை சவாரி” என கேப்ஷனும் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

kaniha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment