விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியலில் வெண்ணிலா கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை கண்மணி மனோகரன் அந்த சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். அதனால், இனி அந்த சீரியலில், இவருக்கு பதில் சீரியல் நடிகை வைஷாலி நடிப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
தொலைக்காட்சிகள், ஓ.டி.டி-களின் வரவால், டிவி சீரியல்கள் தமிழர்களின் வாழ்வில் ஒரு முக்கிய பொழுதுபோக்காக மாறியுள்ளது. பொதுவாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மக்களிடையே கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து 2 முதல் 5 ஆண்டுகள் வரை தொடர்ந்து ஒளிபரப்பாகின்றன. இப்படி நீண்ட காலம் ஒளிபரப்பாகும்போது, அதில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் ஏதோ ஒரு காரணத்துக்காக தொடர்ந்து நடிக்க முடியாமல் போகும், அப்போது அவர்கள் சீரியலில் இருந்து விலகுகிறார்கள். அதனால், அந்த நடிகர், நடிகையருக்கு பதிலாக வேறு ஒருவரை நடிக்க வைப்பார்கள். இப்படி, தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் அவருக்கு பதில் இவர் என்று வருவது புதிது அல்ல. ஆனால், அப்படி புதிதாக நடிப்பவரை அந்த கதாபாத்திரமாக பார்வையாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அதுதான் முக்கியம்.
இயக்குனர் பிரவீன் பென்னட் விஜய் டிவியில் ராஜா ராணி, பாரதிகண்ணம்மா போன்ற பல வெற்றி சீரியல்களை ரியல்கள் இயக்கியவர். தற்போது, விஜய் டிவியில் மகாநதி சீரியலை இயக்கி வருகிறார். இந்த சீரியலுக்கு பெண்கள் மட்டுமல்லாமல் இளைஞர்களும் ரசிகர்களாக இருக்கின்றனர். மகாநதி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த சீரியலில் கதாநாயகன் காதலியாக வெண்ணிலா கேரக்டரில் நடிகை கண்மணி மனோகரன் இருந்தார். இவர் ஏற்கனவே பிரவீன் பென்னட் இயக்கிய பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்திருந்தார். அந்த சீரியல் முடிவடைந்ததும் ஜீ தமிழில் அமுதாவும் அன்னலட்சுமியும் என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
அந்த சீரியல் முடிவடைந்த பிறகு, மகாநதி சீரியலில் கண்மணி மனோகரன் காட்சிகள் வந்தது. ஆனால், மகாநதி சீரியலில், வெண்ணிலாவின் பிளாஷ்பேக் கதை பெரிய அளவில் காட்டப்படவில்லை. அதற்குள், கண்மணி மனோகரன் மகாநதி சீரியலில் இருந்து விலகி இருக்கிறார்.
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள ராகவி ன்ற சீரியலில் கண்மணி மனோகரன் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால்தான், அவர் மகாநதி சீரியலில் இருந்து விலகியாக கூறப்படுகிறது.
இதனால், மகாநதி சீரியலில் கண்மணி மனோகரன் நடித்த வெண்ணிலா கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்ற கேள்வி எழுந்த நிலையில், புதிய வெண்ணிலாவாக நடிகை வைஷாலி நடிக்க கமிட்டாகி இருக்கிறார். அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான முத்தழகு சீரியலில் வில்லியாக நடித்திருந்தார்.
சன் டிவி, விஜய் டிவியில் ஒளிபரப்பான பல சீரியல்களில் வைசாலி அதிகம் வில்லி கதாபாத்திரத்திலேயே நடித்துள்ளார். இனிமேல், மகாநதி சீரியலில் வெண்ணிலா கதாபாத்திரத்தில் வைஷாலி நடிக்க உள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“