Advertisment

இப்போதான் எல்லாம் புரியுது: அஸ்வத் உண்மை முகம் இதுதான்; நிச்சயத்திற்கு பிறகு கண்மணி ரீல்ஸ் வீடியோ!

அஸ்வத் கிடைத்தது எவ்வளவு லக்கி என்று நடிகை கண்மணி மனோகரன் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
aswath and kanmani

கண்மணி - அஸ்வத்

சீரியல் நடிகர் அஸ்வத்துடன் நிச்சயதார்த்தம் நடந்த பிறகு நடிகை கண்மணி மனோகரன் வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

Advertisment

விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக இருந்த பாரதி கண்ணம்மா சீரியலில் முதன்மை கேரக்டரான கண்ணம்மாவின் தங்கை அஞ்சலி என்ற கேரக்டரில் நடித்தவர் நடிகை கண்மணி மனோகரன்.தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்கள் பட்டாளத்தை பெற்ற இவருக்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது.

அதே சமயம் ஒரு கட்டத்தில் கண்மணி மனோகரன் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து திடீரென விலகுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அடுத்து ஜீ தமிழில் அமுதாவும் அன்னலட்சுமியும் என்ற சீரியலில் முதன்மை கேரக்டரில் நடித்திருந்தார். இந்த சீரியலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

அதோடு மட்டுமல்லாமல் ஜீ தமிழில் சூப்பர் குயின் என்ற ரியாலிட்டி ஷோவில் தனது அம்மாவுடன் பங்கேற்றார் கண்மணி மனோகரன். அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியிருந்தார். சமீபத்தில் இந்த சீரியல் முடிவுக்கு வந்தது. அதன்பிறகு கண்மணி அடுத்து எந்த சீரியலில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,கண்மணி தற்போது தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாக புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். 

சன் டிவியின் மிஸ்டர் மனைவி சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நடிகர் அஸ்வத், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், சீரியல் நடிகராகவும் வலம் வருகிறார். இவர் தொகுத்து வழங்கிய காலை வணக்கம் மற்றும் ரஞ்சிதமே நிகழ்ச்சிகள் நல்ல வரவேற்பை பெற்றது. இவருக்கும் கண்மணி மனோகரனுக்கும் தற்போது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரையில் முக்கிய பிரபலங்கள் மற்றும் நடிகைகள் பங்கேற்றுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், கண்மணி மற்றும் அஸ்வத் இருவருக்கும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே நடிகை கண்மணி மனோகரன் தனது இன்ஸ்டாகிராம் வீடியோ ஒன்றில், அஸ்வத் அண்ணா கிடைக்க நீங்க கொடுத்து வச்சிருக்கனும் என்று சிலர் சொன்னது அப்போ புரியவில்லை இப்போ புரியுது என்று கூறிவிட்டு, இருவரும் இணைந்து சாப்பிடுவது போன்ற ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில், கண்மணிக்கான அவரது இலையில் தண்ணீர் தெளித்து அஸ்வத் தயார் செய்ய, அதை கவனிக்காத கண்மணி போனில் எதோ பார்த்துக்கொண்டு இருக்கிறார். இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் சிரிக்கும் எமோஜிகளை வெளியிட்டு அவரது வீடியோவுக்கு கருத்து தெரிவித்து வருகின்றனர். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Kanmani Manoharan Tamil Serial News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment