சமீபத்தில் நடத்த முடிந்த செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் விஜய் கொடுத்த பரிசு பொருளை கேலி செய்து தளபதி ரசிகர்களை வம்புக்கு இழுத்திருக்கிறார் நடிகை கஸ்தூரி.
டுவிட்டரில் கேலி கிண்டல் போன்ற பதிவுகளை போட்டு அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் நபர்களில் ஒருவர் கஸ்தூரி. அரசியல் முதல் சினிமா வரை அவர் இழுக்காத பிரச்சனைகளே இல்லை. எல்லாவற்றிலும் கருத்து சொல்கிறேன் என எதையாவது கூறி அது ஒரு டுவிட்டர் போரில் சென்று முடியும்.
சில மாதங்களுக்கு முன்பு கமல் ஹாசன் அணிந்திருந்த ஆடைப் பற்றி கமெண்ட் அடித்து கமல் ரசிகர்களை வெறுப்பேற்றினார். சமீபத்தில் அஜித் குறித்த சர்ச்சை கிளம்பி, ரசிகர்கள் பலரும் அவருடன் வாக்குவாதத்தில் இறங்கினார்கள். ஏன், மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபோது ஏற்பட்ட உணவு செலவு குறித்த விஷயத்தையும் கஸ்தூரி விட்டு வைக்கவில்லை.
நடிகர் விஜய் குறித்து நடிகை கஸ்தூரி டுவீட்
இந்த பிரச்சனைகளே இன்னும் தீர்ந்தபாடில்லை. இந்நிலையில் விஜய் ரசிகர்களையும் இப்போது வம்புக்கு இழுத்திருக்கிறார். சென்னையில் விஜய் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், அனைவருக்கு புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை கூறினார். மேலும் அங்கு வந்திருந்தவர்களுக்கு பரிசாக தங்க நாணயம் வழங்கினார்.
இது பற்றி டுவிட்டரில் பதிவிட்டிருந்த கஸ்தூரி, “விஜய் மீடியாவை மீட் பண்ணதுக்கு as usual இந்த பக்கம் அந்த பக்கம் ஒரே சர்ச்சை. நான் அதுக்குள்ளே போகல. என் புத்திக்கு என்ன எட்டுது தெரியுமா? ஜோஸ் ஆலுக்காஸ் விளம்பரம் பண்ணிட்டு, ஜாய் அலுக்கஸுல purchase பண்ணியிருக்காரே!” எனக் கூறியுள்ளார்.
December 2018
விஜ்ய் எப்போதோ நடித்த நிறுவனம் ஜோஸ் ஆலுக்காஸ் கடையை நினைவில் வைத்து இப்போது இந்த டுவீட்டை கஸ்தூரி போட்டிருப்பது விஜய்யின் ரசிகர்களை பயங்கரமாக கடுப்பேற்றியுள்ளது. இப்படியே போனால், இந்த ஆண்டின் டுவிட்டர் சர்ச்சை நாயகி கஸ்தூரி தான் என்ற பட்டத்தையே வென்றிடுவார் போல.