நித்தியானந்தாவுக்கு நோபல் பரிசு தந்தே ஆக வேண்டும்... அடம் பிடிக்கும் கஸ்தூரி

சமீபக் காலங்களாகவே மக்கள் மும்பொழுதையும் கழிக்கும் கூடாரமாக மாறிவிட்டது சமூக வலைதளம். அத்தகைய சோஷியல் மீடியாவின் தற்போதைய சென்சேஷன் நித்தியானந்தா. கஸ்தூரி அதை தான் சொல்றாங்க.

‘எத்தனை பிரச்சனைகள், சிசிடிவி காட்சிகள் என்று நீங்கள் எவ்வளவு சதி செய்தாலும் அது எல்லாவற்றையும் மூன்றாம் கண் கொண்டு தகர்தெரியும் ஒரே பகவான்டா எங்க சுவாமி நித்தியானந்தா’ என்று அவரின் சீடர்கள் சில மாதங்களுக்கு முன்பு விட்ட ரவுசுகளை இந்த உலகமே பார்த்ததே.

சாம் ஆண்டர்சன், சம்பூர்னேஷ் என பலரும் காமெடி வீடியோக்களின் மூலம் வைரல் ஆனால், ‘ஒன்னெஸ் கேப்சியூல்’ வீடியோக்களின் காமெடிகள் எல்லாம் நித்திக்கே உரியது. அத்தகைய வீடியோவை கலாய்த்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தின் டுவீட் போட்டுள்ளார்.

அதில், ‘நித்தியானந்தா ராக்ஸ்… அவருக்கு நோபல் பரிசை உடனே அறிவித்துவிடுங்கள். ஓம் நமோ நித்தியானந்தாய நமஹோம்’ என்று டுவீட் செய்துள்ளார். இதனை பலரும் ரீடுவீட் செய்துகொண்டார் என்றால் நீங்களே பாருங்களேன்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close