சினிமாத் துறையில் எனக்குமே பாலியல் தொல்லை: நடிகை கஸ்தூரி

பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது முழு அனுதாபம் உண்டு. ஆனால் எனது தனிப்பட்ட கருத்துகள் சட்டத்தைப் பற்றியது அல்ல

பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது முழு அனுதாபம் உண்டு. ஆனால் எனது தனிப்பட்ட கருத்துகள் சட்டத்தைப் பற்றியது அல்ல

author-image
WebDesk
New Update
சினிமாத் துறையில் எனக்குமே பாலியல் தொல்லை: நடிகை கஸ்தூரி

பிளாக் ஃபிரைடே(Black Friday), தி லன்ச் பாக்ஸ்(The lunch Box) போன்ற முன்னணி திரைப்படங்களை இயக்கிய அனுராக் காஷ்யப், பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களை அளித்ததாக நடிகை பயல் கோஷ் சில நாட்களுக்கு முன்பு குற்றம் சாட்டினார்.

Advertisment

 

பயல் கோஷின் ட்வீட் பாலிவுட் சினிமாவில் மிகப் பெரிய சர்ச்சையாக உருவெடுத்தது. நடிகை கங்கனா, மத்திய அமைச்சார் ராமதாஸ் அத்வாலே உள்ளிட்ட பலர் அனுராக் காஷ்யப் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விதித்து வருகின்றனர்.

Advertisment
Advertisements

இருப்பினும், அனுராக் காஷ்யப்  அரசுக்கு எதிராக எடுத்த நிலைப்பாடு காரணமாக குறி வைக்கப்படுகிறார் என்ற கருத்தும் அரசியல் வாட்டாரங்களில் கூறப்படுகிறது. நடிகை டாப்சி பன்னு தனது இன்ஸ்ட்டாகிராம்  அக்கவுண்டில்," எனக்குத் தெரிந்த மிகப்பெரிய பெண்ணியவாதி அனுராக். நீங்கள் உருவாக்கும் உலகில் பெண்கள் எவ்வளவு சக்திவாய்ந்தவர்கள் என்பதைக் காட்டும் மற்றொரு கலைப் படைப்பை காண இருக்கிறேன்" என்று தெரிவித்தார்.

 

 

இந்நிலையில், நடிகை கஸ்தூரி பயல் கோஷ்- அனுராக் காஷ்யப் தொடர்பாக தனது கருத்தை பதிவிட்டுள்ளார். தனது ட்விட்டரில், " நடிகை பயல் கோஷ் அனுராக் காஷ்யப் மீது பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

சட்ட ரீதியான பார்வை: தெளிவான அ) உறுதிப்படுத்தும் சான்றுகள் இல்லாமல் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை  நிரூபிக்க முடியாது. ஆனால், புகார்கள்... சம்பந்தப்பட்ட ஒருவரையோ அல்லது அனைவரின் பெயரையும் சீரழிக்கும். எனவே, எதுவம் நல்லதல்ல" என்று தெரிவித்தார்.

இதற்கு ட்விட்டர் பயனர் ஒருவர், உங்களுக்கு நெருக்கமான ஒருவருக்கு இவ்வாறு நடந்திருந்தால் உங்களது பதில் இதுவாகத் தான் இருந்திருக்குமா? என்று கேட்டார்.

அதற்குப் பதிலளித்த கஸ்தூரி, "நெருங்கியவர்கள் என்ன, எனக்கே நடந்திருக்கிறது. மூடிய கதவுகளுக்கு பின்னால் எல்லாம் அப்படித்தான். பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது முழு அனுதாபம் உண்டு. ஆனால் எனது தனிப்பட்ட கருத்துகள் சட்டத்தைப் பற்றியது அல்ல" என்று தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Kasthuri

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: