அவருக்கு இது தேவை தான்; கண்டிப்பா கிடைக்கணும்: விஜய் குறித்து உண்மையை உடைத்த நடிகை கௌசல்யா!

நடிகர் விஜய்யுடன் இணைந்து பணியாற்றிய தனது அனுபவம் குறித்து கௌசல்யா தெரிவித்துள்ளார். குறிப்பாக, விஜய்யை மிகவும் பணிவான நபர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் விஜய்யுடன் இணைந்து பணியாற்றிய தனது அனுபவம் குறித்து கௌசல்யா தெரிவித்துள்ளார். குறிப்பாக, விஜய்யை மிகவும் பணிவான நபர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
Vijay and Kausalya

நடிகர் விஜய் மிகவும் பணிவான நபர் என்றும், இவ்வளவு புகழ் மற்றும் அன்பிற்கு அவர் தகுதியானவர் தான் என்றும் நடிகை கௌசல்யா தெரிவித்துள்ளார்.

Advertisment

தமிழ் சினிமா வரலாற்றில் நடிகர் விஜய்க்கு தனித்துவமான இடம் இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதிகமான வெற்றிப் படங்கள் கொடுத்த நடிகர்கள் பட்டியலில் விஜய்க்கு முதன்மையான இடம் இருக்கிறது.

தொடக்கத்தில் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரின் மகன் என்ற ஒற்றை அடையாளத்துடன் சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும், அதன் பின்னர் ரசிகர்களுக்கு விருப்பமான நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

விஜய்யின் திரைப்பயணத்தில் 'பூவே உனக்காக' திரைப்படத்திற்கு பெரும் பங்கு இருக்கிறது. அப்படத்தின் மூலமாக விஜய்க்கு ஃபேமிலி ஆடியன்ஸ் கிடைத்தனர். இதனை தற்போது வரை தக்க வைத்துள்ளார். இதன் பின்னர், 'கண்ணுக்குள் நிலவு', 'குஷி', 'துள்ளாத மனமும் துள்ளும்' போன்ற படங்களில் அவரது நடிப்பு பரவலாக பேசப்பட்டது.

Advertisment
Advertisements

இதன் பின்னர், 'கில்லி', 'போக்கிரி' ஆகிய படங்கள் ஒரு நட்சத்திர அந்தஸ்திற்கு விஜய்யை கொண்டு சென்றன. இவ்வாறு பல்வேறு ஹிட் திரைப்படங்களை கொடுத்த விஜய்க்கு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பல தரப்பினர் ரசிகர்களாக உள்ளனர். 

இப்படி உச்ச நடிகராக வலம் வரும் சூழலில் சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுபடப் போவதாக விஜய் அறிவித்தார். இதனால் அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தாலும், தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளை விஜய் நகர்த்தி வருகிறார். அந்த வகையில், ஹெச். வினோத் இயக்கத்தில், அவர் நடித்து வரும் 'ஜனநாயகன்' படம் தான், விஜய்யின் கடைசி திரைப்படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விஜய்யுடன் இணைந்து 'பிரியமுடன்' திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து நடிகை கௌசல்யா பகிர்ந்து கொண்டார். அப்போது, தன்னுடைய திருமணம் தொடர்பான பெர்சனல் விஷயங்களையும் விஜய் தன்னிடம் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, "நடிகர் விஜய் ஒரு ஸ்வீட்ஹார்ட். விஜய்யின் குணத்திற்காகவே இவ்வளவு புகழ் நிச்சயம் அவருக்கு கிடைக்க வேண்டும். அவர் மிகவும் பணிவான மனிதர். மேலும், சங்கீதாவை திருமணம் செய்து கொள்வது குறித்தும் என்னுடன் விஜய் முன்னரே தெரிவித்தார்.

குறிப்பாக, என்னிடம் தான் இந்த தகவலை முதன்முதலாக அவர் கூறினார் என்று நினைக்கிறேன். சென்னையில் இருந்து ராஜஸ்தானுக்கு சென்று கொண்டிருந்த போது, இது குறித்து என்னிடம் விஜய் பகிர்ந்து கொண்டார்" என நடிகை கௌசல்யா தெரிவித்துள்ளார்.

Vijay

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: