Advertisment

விஜே சித்ரா இடத்தைப் பிடித்த காவ்யா: பாரதி கண்ணம்மாவுக்கு 'பை பை'

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து மறைந்த விஜே சித்ராவுக்கு பதிலாக முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் காவியா அறிவுமணி, பாரதி கண்ணம்மா சீரியலுக்கு பை பை சொல்லி தொடரில் இருந்து விலகுவதாக தெரிவித்துளார்.

author-image
WebDesk
New Update
vijay tv, bharathi kannamma serial, pandian stores, kaviya arivumani, விஜய் டிவி, பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், காவியா அறிவுமணி, kaviya arivumani relived from bharathi kannamma serial

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து மறைந்த விஜே சித்ராவுக்கு பதிலாக முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் காவியா அறிவுமணி அவர் ஏற்கெனவே நடித்துவந்த பாரதி கண்ணம்மா சீரியலுக்கு பை பை சொல்லி தொடரில் இருந்து விலகுவதாக தெரிவித்துளார்.

Advertisment

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் பேரதாரவைப் பெற்ற சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா தொடர். இந்த தொடரில் கதாநாயகன் பாரதிக்கு தங்கையாக நடித்த நடிகை காவியா அறிவுமணி அனைவரின் கவனத்தையும் பெற்றார்.

இந்த சூழலில்தான், கடந்த டிசம்பர் மாதம் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்த விஜே சித்ரா தற்கொலை செய்துகொண்டார். அதனால், அவருடைய கதாபாத்திரத்தில் யார் நடிப்பார்கள்? அவரை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ற கேள்வி இருந்தது.

யாரும் எதிர்பாராத விதமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை கதாபாத்திரத்தில் காவியா அறிவுமணி ஒப்பந்தமாகி சில எபிசோடுகளில் நடித்து வருகிறார். விஜே சித்ராவின் முல்லை கதாபாத்திரத்தில் முதலில் பொருந்தாத காவியா இப்போது காதாபாத்திரத்துடன் ஒட்டிக்கொண்டார். முதலில் ஏற்கத் தயங்கிய ரசிகர்களும் இப்போது காவியாவை முல்லையாக ஏற்றுக்கொண்டனர்.

இந்த நிலையில், காவியா அறிவுமணி, பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கத் தொடங்கிய பிறகு, காவியா பாரதி கண்ணம்மா சீரியலுக்கு பை பை சொல்லி இருப்பது அந்த சீரியலின் ரசிகர்கள் இடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Vijay Tv Tv Serial Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment