நடிகர் அருண் பாண்டியன் திரைக்கதை எழுதி தயாரித்து விரைவில் வெளி வர உள்ள அஃகேனம் திரைப்படம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கீர்த்தி பாண்டியன் அசோக்செல்வனுடன் நல்ல கதை வரும் போது இணைந்து நடிப்போம் என்று கூறினார்.
நடிகர் அருண் பாண்டியன் திரைக்கதை எழுதி தயாரித்து விரைவில் வெளி வர உள்ள அஃகேனம் திரைப்படம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கோவையில் பிராட்வே சினிமாஸ் வளாகத்தி்ல் செவ்வாய்க்கிழமை (01.07.2025) நடைபெற்றது.
இதில் நடிகர் அருண் பாண்டியன், படத்தின் நாயகி கீர்த்தி பாண்டியன் உட்பட திரைப்பட குழுவினர் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் அருண் பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன், அசோக்செல்வனுடன் நல்ல கதை வரும் போது இணைந்து நடிப்போம் என்று கூறினார்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/07/01/akkenam-2025-07-01-21-47-28.jpeg)
முன்னதாக வித்தியாசமான தலைப்பாக உள்ள அஃகேனம் தலைப்பு குறித்து நடிகரும் தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் கூறுகையில், தமிழில் ஆய்த எழுத்து என்று குறிப்பிடப்படும் மூன்று புள்ளிகளாக அமைந்துள்ளதை போல இப்படத்தின் திரைக்கதையும் இருக்கும் எனவும் முழுவதும் இளைஞர்கள் இணைந்து இந்த படத்தை உருவாக்கி உள்ளதாக தெரிவித்தார்.
நடிகர் அருண் பாண்டியன் எல்லா கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த படம் ஒரு உண்மைச் சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் எனவும் கூறினார்.
2 மணி நேரம் பொழுது போவதற்காக வரும் ரசிகர்களை திருப்தி படுத்துவதே மட்டும் போதுமானது எனவும் அதை விடுத்து மெசேஜ் கூறுவதெல்லாம் நமது வேலை இல்லை என அவர் கூறினார்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/07/01/akkenam-2-2025-07-01-21-47-28.jpeg)
டூரிஸ்ட் பேமிலி போன்ற படங்கள் பெரிய அளவில் விளம்பரபடுத்தவில்லை என்றாலும் மக்கள் மத்தியில் போய் சேர்ந்ததாக கூறிய அருண் பாண்டியன் நல்ல படங்களை மக்களே விளம்பரப்படுத்துவார்கள் என கூறினார்.
இறுதியாக படத்தின் பட்ஜெட்டில் நிறைய செலவு செய்யபட்டுள்ளது. ஆனால், கேரவனுக்கு செலவு செய்யவில்லை என நகைச்சுவையாக கூறினார்.
செய்தி: பி.ரஹ்மான்