scorecardresearch

காதலை ஒப்புக்கொண்ட கீர்த்தி சுரேஷ்: ‘இன்னும் யாரும் கண்டுபிடிக்கல; அந்த மர்ம மனிதனை நானே காட்டுவேன்’

கீர்த்தி சுரேஷ், விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும், அவர் தொழிலதிபர் ஒருவரை காதலிப்பதாகவும் தகவல் வெளியானது

Keerthi Suresh
நடிகை கீர்த்தி சுரேஷ்

தனது காதலை ஒப்புக்கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் விரைவில் அந்த மர்ம மனிதனை அறிமுகப்படுத்துவதாகவும், இதுவரை யாருமே சரியாக கண்டுபிடிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்

ஏ.எல்.விஜய் இயக்கிய இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து விஜய் விக்ரம், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். மேலும், கடந்த ஆண்டு வெளியான சாணிகாகிதம் படத்தின் மூலம் சோலோ நாயகியாக களமிறங்கினர்.

அதேபோல் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருதையும் வென்றுள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும், அவர் தொழிலதிபர் ஒருவரை காதலிப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, ரியல் எஸ்டேட் அதிபரும், தொழிலதிபருமான தன் நீண்ட நாள் நண்பன் ஃபர்ஹான் பின் லியாகத் என்பருவருடன் மேட்சிங் மேட்சிங் உடையணிந்து நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார் கீர்த்தி சுரேஷ்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், கீர்த்தி சுரேஷ் இவரைத்தான் காதலிக்கிறாரா என்று கேட்டு வருகின்றனர். இதனிடையே இந்த புகைப்படம் குறித்து விளக்கம் அளித்துள்ள கீர்த்தி சுரேஷ், “ஹாஹாஹா… இந்த நேரத்தில் என் நண்பனை இதில் இழுக்க வேண்டாம். நேரம் வரும்போது நானே அந்த மர்ம மனிதனை காட்டுகிறேன். அதுவரை சில் பில் ஆக காத்திருங்கள். பின்குறிப்பு : இதுவரை ஒருமுறை கூட யாரும் சரியாக கண்டுபிடிக்கவில்லை” என குறிப்பிட்டுள்ளார். 

இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், யார் அந்த மர்மமனிதன் என்று கேட்டு வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Actress keerthi suresh agree her love and introduce her mystery man soon