சர்கார், பைரவா என 2 படங்களில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தாலும், லியோ படம் தனக்கு பிடிக்கவில்லை என்று கீர்த்தி சுரேஷின் அப்பா கூறியுள்ளது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் விஜய். தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள அவருக்கு, கேரளாவிலும் தனியாக ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களாக மோகன்லால் மம்முட்டியை விட விஜய்க்கு அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர்.
இதன் காரணமாக விஜய் படம் வெளியாகும்போது தமிழகத்தில் ரசிகர்கள் கொண்டாடவது போன்று கேரளாவிலும் ரசிகர்கள் ஆர்பரித்து கொண்டாடுவது வழக்கமான இருந்து வருகிறது. அதே சமயம் மலையாள சினிமாவில் சில நட்சத்திரங்கள் விஜயை விமர்சிப்பது அவ்வப்போது நடந்து வருகிறது. பீஸ்ட் படத்தில் விஜயுடன் இணைந்து நடித்த ஷைன் டாம் சாக்கோ விஜய் குறித்து நெகடீவான கருத்துக்களை பேசி வருகிறார்.
தற்போது இந்த வரிசையில் புதிதாக இணைந்துள்ளவர் தயாரிப்பாளர் சுரேஷ். ரஜினிக்கு ஜோடியாக நெற்றிக்கண் படத்தில் நடித்திருந்த நடிகை மேனகாவின் கணவரான சுரேஷ் கீர்த்தி சுரேஷின் அப்பா. சமீபத்தில் இவர் பங்கேற்ற ஒரு நேர்காணலில், விஜயின் லியோ படம் எனக்கு பிடிக்கவில்லை. க்ளைமேக்ஸில் 200 பேரை அடிப்பது எல்லாம் சூப்பர் ஹீரோ போல் உள்ளது. சாமானிய மக்கள் இந்த படத்தை ஒன்றி பார்கக முடியவில்லை என்று கூறியுள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் யின் தந்தை
— என் உயிர் Superstar ரஜினி ரசிகன் (@KABiLANS7) December 19, 2023
About leo....
வச்சு செஞ்சுடார் டேய் @actorvijay என்னடா இது 🤭🤭 pic.twitter.com/vfQ4Z6e7Q6
இந்த வீடியோவை ஷேர் செய்துள்ள ரஜினிகாந்த் ரசிகர்கள் லியோ படத்தை இதை விட யாரும் அதிகமாக விமர்சிக்க முடியாது என்றும், கீர்த்தி சுரேஷ் அப்படி விஜயை வச்சி செய்துவிட்டார் என்றும் கூறி வரும் நிலையில், சாணி காகிதம் படத்தில், உங்க பொண்ணு கீர்த்தி சுரேஷ் ஸ்டன்டை நீங்கள் பார்கவில்லையா? என்று விஜய் ரசிகர்கள் சுரேஷ் குமாருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
அதேபோல் மலையாள படங்கள் வசூலில் பெரிய சாதனை படைக்கவில்லை என்பதால், இப்படி பேசுகிறார் என்றும், பைரவா படம் வரும்போது ஏன் இப்படி பேசவில்லை என்றும், கேட்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.