/tamil-ie/media/media_files/uploads/2023/09/Keerthi-Suresh.jpg)
நடிகை கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2023/09/Keerthi-7.jpg)
ரஜினியுடன் நெற்றிக்கண் படத்தில் நடித்த நடிகை மேனகாவின் மகளாக திரைத்துறையில் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ், மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்த அவர், தமிழில் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/09/Keerthi-6.jpg)
அதனைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன், விஜய், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்த கீர்த்தி, சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக மகாநடி படத்தில் நடித்திருந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/09/Keerthi-5.jpg)
இந்த படத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்துக்கு தங்கையாக நடித்திருந்தார். இந்த படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.
/tamil-ie/media/media_files/uploads/2023/09/Keerthi-4.jpg)
அதனைத் தொடர்ந்து சாணிகாகிதம் படத்தில் தனி நாயகியாக செல்வராகவனுடன் இணைந்து நடித்தார். இந்த படம் அவருக்கு பாராட்டுக்களை பெற்று கொடுத்தது.
/tamil-ie/media/media_files/uploads/2023/09/Keerthi-3.jpg)
சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடித்த போலோ சங்கர் திரைப்படம் வெளியானது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தாலும் போலோ சங்கர் படம் ரசிகர்களை கவரவில்லை.
/tamil-ie/media/media_files/uploads/2023/09/Keerthi-2.jpg)
அதற்கு முன்பே வெளியான மாமன்னன் திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்றிருந்தாலும் கீர்த்தி சுரேஷ் கேரக்டர் பாராட்டும்படி இல்லை என்று ரசிகாகள் கூறியிருந்தனர்.
/tamil-ie/media/media_files/uploads/2023/09/Keerthi-1.jpg)
தற்போது ரகுதாத்தா சைரன் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.