நடிகை கீர்த்தி சுரேஷ் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். தமிழ், மலையாளம், தெலுங்கில்
முன்னணி நடிகையாக உள்ளார். தமிழில் விஜய், ரஜினிகாந்த், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் உடன் இவர் நடித்த ரஜினி முருகன் படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. இவர் தெலுங்கில் மகாநடி படத்தில் கலக்கி இருந்தார். இந்த படத்திற்காக
கீர்த்தி சுரேஷ் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார். அண்மையில் தமிழில் இவர் நடித்த ரகுதாத்தா படம் வெளியானது.
ஹிந்தியில் பேபி ஜான் என்ற படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இந்நிலையில், தனது குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படம், வீடியோவை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பட்டாசு வெடித்தும், மத்தாப்பு பிடித்தும் கீர்த்தி சுரேஷ் தீபாவளி கொண்டாடி உள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“