Advertisment

யோகா டீச்சராகவே மாறிட்டாங்க... கீர்த்தி சுரேஷுக்கு குசும்பு ஜாஸ்தி

Actress keerthy suresh imitates his yoga teacher video goes viral: தமிழில் முன்னனி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், தனது யோகா டீச்சரை இமிடேட் செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
யோகா டீச்சராகவே மாறிட்டாங்க... கீர்த்தி சுரேஷுக்கு குசும்பு ஜாஸ்தி

தமிழில் முன்னனி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், தனது யோகா டீச்சரை இமிடேட் செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

முன்னாள் நடிகை மேனகா சுரேஷின் மகளான கீர்த்தி சுரேஷ், இயக்குனர் விஜய் இயக்கத்தில் இது என்ன மாயம் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் சிவகார்த்திக்கேயனுடன் நடித்த ரஜினி முருகன் இவருக்கு நிறைய ரசிகர்களைப் பெற்றுத்தந்தது. இவர் மேலும், ரெமோ, பைரவா, தானா சேர்ந்தக் கூட்டம், சர்கார் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இவர் தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிப்படங்களிலும் நடித்து வருகிறார்.

நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் சாவித்திரியாகவே வாழ்ந்த கீர்த்தி சுரேஷ்க்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. பெண் கதாப்பாத்திரத்தை முன்னிறுத்தி இவர் நடித்த பெண்குயின் திரைப்படம் ஒடிடி தளத்தில் கடந்த ஆண்டு வெளியானது.

தற்போது ஓரிரு படங்களில் நடித்து வரும் கீர்த்தி, ஒய்வு கிடைக்கும் நேரங்களில் யோகா செய்து அதனை வீடியோவாக சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். ஆன்லைனில் யோகா கற்று வரும் கீர்த்தி சுரேஷ் தனது உடலை செம ஃபிட்டாக வைத்துள்ளார்.

இந்த நிலையில் தனது யோகா ஆசிரியர் தாரா போல் கீர்த்தி சுரேஷ் இமிடேட் செய்யும் வீடியோவை, தாரா சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அதில், “கீர்த்தி சுரேஷ் (கிட்டி) என்னை போலவே இமிடேட் செய்துள்ளார். நான் என் யோகா வகுப்பை வழக்கமாக இப்படிதான் முடிப்பேன். அப்படியே கீர்த்தி சுரேஷூம் இமிடேட் செய்துள்ளார்.” என பதிவிட்டுள்ளார்.

இதே வீடியோவை தமது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள கீர்த்தி சுரேஷ், “என்னோட அமைதி இந்த தினசரி யோகா வகுப்பு மூலமாக வருகிறது, என்னுடைய யோகா டீச்சரைப் போல் நான் இமிடேட் செய்துள்ளதை பாருங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Keerthy Suresh Viral Video Instagram Video Yoga Class
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment