பிரம்மாண்ட படைப்பில் கீர்த்தி சுரேஷ்... கோலிவுட் நிராகரித்தாலும் மீண்டும் அங்கீகரித்த டாலிவுட்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
keerthy suresh, கீர்த்தி சுரேஷ்

keerthy suresh, கீர்த்தி சுரேஷ்

டாலிவுட் இயக்குநர் ராஜமௌலி என்றாலே பிரம்மாண்ட படைப்பு தான். பாகுபலியை தொடர்ந்து அவரின் அடுத்த படைப்பில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார்.

Advertisment

நடிகர் ராம் சரண் தேஜா நடித்திருந்த மகதீரா படத்தில் தொடங்கி, பிரபாஸ் - அனுஷ்கா ஜோடியில் பட்டையை கிளப்பியிருக்கும் பாகுபலி 2 வரை ராஜமௌலியின் படைப்புகள் எல்லாமே அடி தூள்.

ராஜமௌலி படத்தில் கீர்த்தி சுரேஷ்

கதையிலும், படத்தின் பாடல்களை தேர்ந்தெடுப்பது, கிராஃபிக்ஸ், நடிகர்கள் என அனைத்தையும் தேர்ந்தெடுத்து தனது படத்தின் ரிலீஸ் வரை பல விஷயங்களில் கவனத்தை வைத்திருப்பவர் ராஜமௌலி. பெரும்பாலும் இதிகாசங்கள் மற்றும் ராஜ குடும்ப கதைகளையே இயக்கும் இவர் தற்போது மற்றுமொரு ஒரு படைப்பில் களமிறங்கியிருக்கிறார்.

Advertisment
Advertisements

நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரன் தேஜா இணைந்து நடிக்கும் இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க இருக்கும் நாயகிகளுக்கான வேட்டையில் இயக்குநர் இறங்கியுள்ளார். இதில், கீர்த்தி சுரேஷ் சீதா தேவியாக நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் பெயர் ராம ராவண ராஜியம் என்று பெயர் சூட்டப்பட்டதாக தகவல்கள் வந்திருந்தாலும், அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் ராமர் - ராவணர் கதையை கருவாக கொண்டு இந்த படம் உருவாகுமேயானால், இதில் நடிக்கும் இரண்டு நடிகர்கள் யார் ராமர், யார் ராவணர் என்ற எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.

Rajamouli Keerthy Suresh Tamil Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: