தமிழ் சினிமா உலகில் 90களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை குஷ்பூ. தமிழ்நாட்டில் ரசிகர்கள் அவருக்கு கோயில் கட்டும் அளவுக்கு ரசிகர்களைக் கவர்ந்திருந்தார். ரஜினி, கமல், பிரபு, கார்த்தி, சத்யராஜ் என அன்றைக்கு முன்னணி நடிகர்களுடன் ஹீரோயினாக நடித்துள்ளார். விஜய் படத்திலும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.
இன்றைக்கு உருவகேலி பற்றிய விழிப்புணர்வு பெருகியிருக்கிறது. இன்றைக்கு பலரும் ஸ்லிம்தான் அழகு என்று கூறினாலும் அன்றைக்கு பூசியது போல இருந்த குஷ்பூதான் அன்றைக்கு இளைஞர்களின் கனவு ஹீரோயின். 25 ஆண்டுகளுக்கு முன்பு குஷ்பூவின் கன்னங்களுக்கு உருவகமாகத்தான் இன்றைக்கு ஹோட்டல்களில் மெதுமெதுவென்ற பெரிய இட்லியை குஷ்பூ இட்லி என்று அழைக்கின்றனர். அந்த அளவுக்கு ரசிகர்களின் அன்பை பெற்றவர் குஷ்பூ.
நடிகை குஷ்பூ இயக்குனர் சுந்தர் சி-யை திருமணம் செய்துகொண்ட பிறகு சினிமாவில் நடிப்பதற்கு சற்று ஓய்வு கொடுத்தாலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சீரியல், அரசியல் என்று தன்னை பிஸியாக வைத்துக்கொண்டார். குஷ்பூ – சுந்தர் சி தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்தார். பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தோல்வியைக் கண்டு துவளாமல் அரசியலில் தொடர்ந்து பயணிக்கிறார்.
இதனிடையே, சீரியல் தயாரிப்பு, சினிமா என்றும் பிஸியாக இருக்கிறார். சமீபத்தில், இயக்க்னர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள அண்ணாத்த படத்தில் குஷ்பூ நடித்து முடித்துள்ளார். தனது எடையக் குறைக்க கடுமையாக உடற்பயிற்சி செய்வது வந்த குஷ்பூ, அவ்வப்போது தனது புதிய அழகிய புகைப்படங்களை ட்விட்டரிலும் இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டு வந்தார்.
அந்த வரிசையில், தற்போது நடிகை குஷ்பூ வெளியிட்டுள்ள அவருடைய புகைப்படம் ரசிகர்கள் பலரையும் வியக்க வைத்துள்ளது. குஷ்பூ கடுமையாக உடற்பயிற்சி செய்து தனது எடையை பெரிய அளவில் குறைத்து மிகவும் ஸ்லிம் ஆகியுள்ளார். குஷ்பூ இந்த புகைப்படம் குறித்து குறிப்பிடுகையில், “கடின உழைப்பின் மூலமாக கிடைக்கும் பிரதிபலனின் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
இந்த புகைப்படத்தில் குஷ்பூ மாடர்ன் உடையில், 25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த குஷ்பூவைவிட மிகவும் இளமையாக மாடர்னாகவும் இருக்கிறார். இந்தபுகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள், மேடம் எப்படி இருந்த நீங்க இப்படி ஆகியிட்டீங்க, ஸ்லிம் குஷ்பூ என்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஒரு ட்விட்டர் பயனர், தோற்றத்தில் நீங்கள் காலத்தை 20 ஆண்டுகளுக்கு பின்னோக்கி நகர்த்தி விட்டீர்கள் என்று கூறியுள்ளார்.
குஷ்பூவின் ஸ்லிம் மாடர்ன் புகைப்படத்துக்கு இயக்குனர் சீனு ராமசாமி, “அதிசயம், இப்படியே தொடருங்கள் ஜி” என்று கம்மெண்ட் பதிவிட்டுள்ளார்.
இவர்கள் எல்லோரையும்விட ஒரு ரசிகர் இந்த படங்களைப் பார்த்து, மேடம் நான் உங்களை கல்யாணம் பண்ணிக்க விரும்புகிறேன் என்று குஷ்பூவை கேட்டுவிட்டார். குஷ்பூ அந்த ரசிகர் மீது கோபப்படாமல், “ஓ சாரி, நீங்க ரொம்ப தாமதமாக வந்திருக்கிறீகள். 21 வருஷம் ஆகிடுச்சு. இருந்தாலும் என் கணவரிடம் கேட்கிறேன்” என்று கூலாக பதில் கூறியுள்ளார்.
இந்த ஜாலியான உரையாடல் இத்துடன் முடியும் என்று பார்த்தால், இன்னொரு ரசிகர் மேடம் உன்க்க கணவர் என்ன பதில் சொன்னார் என்று கேட்டு குஷ்பூவிடம் கேள்வி எழுப்பினார்.
ரசிகரின் இந்த கேள்விக்கும் கூலாக ஒரு பதிலை சொன்னார் குஷ்பூ, “துரதிருஷ்டவசமாக நான் மட்டும்தான் அவருடைய மனைவியாக இருக்கிறேன். அதனால், அவர் விட்டுக்கொடுக்க மாட்டேன்னு” சொல்லிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”