நடிகை குஷ்பு டுவிட்டரில் பகிர்ந்த அவருடைய சிறுவயது புகைப்படத்தை பார்த்த சினிமா பிரபலங்கள், நெட்டிசன்கள் மேடம், இது உங்களுடைய 14 வயது புகைப்படமா? இப்பவும் அப்படியே இருக்கீங்களே மேடம் என்று கம்மெண்ட் செய்து லைக் செய்து வருகின்றனர்.
இந்தியாவில் முதல் முறையாக ஒரு நடிகைக்கு ரசிகர்கள் கோயில் கட்டினார்கள் என்றால் அது நடிகை குஷ்புவுக்குதான். தமிழ் சினிமாவில் 1980-களில் நடிகை குஷ்பு முன்னணி நட்சத்திர நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார் ஆகியோருக்கு ஜோடியாக நடித்தவர். அன்றைய காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி ஹிரோயினாக வெற்றிக்கொடி நாட்டியவர் குஷ்பு.
குஷ்பு 2001-ம் ஆண்டு இயக்குனர் சுந்தர் சி-யை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அவந்திகா, ஆனந்திதா என இரண்டு மகள்கள் உள்ளனர்.
சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த குஷ்பு அரசியலில் களம் இறங்கினார். முதலில் திமுகவில் இணைந்த குஷ்பு பின்னர், திமுகவில் இருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்து தேசிய செய்தித்தொடர்பாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.
குஷ்பு தனது அரசியல் பணிகளுடன் சினிமா பணிகளையும் தொடர்ந்து செய்துவருகிறார். சினிமாவில் குணச்சித்திர வேடங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்து வருகிறார். தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தில் குஷ்பு நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில், அவருடைய சிறு வயது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தைப் பற்றி குஷ்பு குறிப்பிடுகையில், இதை என்னுடைய நண்பர்கள் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த புகைப்படம் எடுக்கப்பட்டபோது எனக்கு 14 வயதிருக்கும் என்று நினைக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
குஷ்பு வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தை நடன இயக்குனர் பிருந்தா உள்ளிட்ட பலர் லைக் செய்து கம்மெண்ட் செய்துள்ளனர். இந்த படத்தில் நடிகை குஷ்பு மிகவும் அழகாக காணப்படுகிறார். புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் 14 வயது படமா இது இப்பவும் அப்படியே இருக்கீங்களே மேடம் என்று கம்மெண்ட் செய்துள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"