இசையமைப்பாளர் இமான் தனக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பெரிய துரோகம் செய்துவிட்டதாகக் கூறிய நிலையில், இமானின் முன்னாள் மனைவி யூடியூபில் வீடியோ விளக்கம் அளித்திருந்தது குறித்து நடிகை குட்டி பத்மினி பகீர் தகவல் கூறியுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு இசையமைப்பாளர் இமான் தனது மனைவி மோனிகாவை கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார். இருவருக்கும் இரண்டு மகள்கள் இருக்கும் சூழ்நிலையில், விவாகரத்து செய்யப்பட்டது குறித்து அப்போது பேசப்பட்டது. இதையடுத்து, அமலி என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
அண்மையில், இசையமைப்பாளர் இமான் அளித்த பேட்டி ஒன்றில் இனி சிவகார்த்திகேயனோடு சேர்ந்து நான் படம் பண்ண மாட்டேன் அது கனவில் கூட நடக்காது, சிவகார்த்திகேயன் எனக்கு பெரும் துரோகம் செய்துவிட்டேன். அதை வெளியே சொன்னால் எனது குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படலாம் என்று கூறியது சமூக வலைதளங்களில் நெட்டிசன்களின் வாய்க்கு அவலானது.
இசையமைப்பாளர் இமான் மற்றும் அவருடைய முன்னாள் மனைவி மோனிகா விவாகரத்துக்கு காரணம் சிவகார்த்திகேயன் தான் என்கிற விதமாக பேச்சு சமூக வலைதளத்தில் எழுந்தது. இதற்கு இமானின் முன்னாள் மனைவி மோனிகா வீடியோ ஒன்று வெளியிட்டு விளக்கம் கொடுத்திருந்தார்.
அதில், மோனிகா, நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு ஜெண்டில் மேன், அவர் எங்களை சேர்த்து வைக்கத்தான் வந்தார், எங்களுக்குள் நல்ல நட்பு இருந்தது என்று விளக்கம் கொடுத்து இருந்தார். மேலும், இமான் தனக்கு ஜீவனாம்சம் எதுவும் கொடுக்கவில்லை என்றும் இமான் இப்போது வாழ்ந்துகொண்டிருக்கும் மனைவியோடு திருமணத்திற்கு முன்பே பழகி வந்ததாகவும், ஒரு பெண்ணை பார்த்து வைத்துவிட்டு தான் தனக்கு விவாகரத்து கொடுத்து இருந்தார் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் பிரபல நடிகை குட்டி பத்மினி, இசையமைப்பாளர் இமான் பற்றி அவருடைய முன்னாள் மனைவி சொன்ன தகவல்கள் பொய் என்றும் அப்போது நடந்தது என்ன என்று பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த வீடியோவில் நடிகை குட்டி பத்மினி கூறியிருப்பதாவது: “இமான் வீட்டிற்கும் எங்களுக்கும் மிகவும் நெருக்கம். இமான் ஒரு அம்மாவை போலத்தான் என்னிடம் பழகி வருகிறார். ஆனால், மோனிகா ஜீவனாம்சம் கொடுக்கவில்லை என்று சொல்வதெல்லாம் பொய். மோனிகாவிற்கு கொடுக்க வேண்டிய ஜீவனாம்சத்தை இமான் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
இப்போது வரைக்கும் அவருடைய இரண்டு பெண் குழந்தைகளின் படிப்பு செலவையும் இமான் தான் பார்த்துக் கொள்கிறார். அதோடு இமானும் அவருடைய தந்தையும் ஒரு நாள் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தனர். அப்போது நடந்த சம்பவங்கள், அவர்களுக்குள் இருக்கும் சோகங்கள் எல்லாவற்றையும் என்னிடம் பகிர்ந்து இருந்தார்கள்.
அதுமட்டுமல்லாமல் இப்போது இரண்டாவதாக திருமணம் செய்து இருக்கும் அமலி என்ற பெண்ணை நாங்கள் தான் இமானுக்கு அறிமுகம் செய்து வைத்தோம்.விவாகரத்துக்கு பிறகு அமலியை கல்யாணம் செய்ய அவரை புரிந்து கொள்வதற்காக தான் ஒரு வருடம் அமலியோடு இமான் பழகி வந்தார். ஆனால் இவர்கள் இருவரும் பழகி வந்தது கூட விவாகரத்திற்கு பிறகு தான்” என்று குட்டி பத்மினி கூறி இருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“