தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான லாவண்யா திரிபாதி வாரிசு நடிகர் ஒருவரை காதலிப்பதாகவும், இருவரும் திருமண ஏற்பாடுகள் நடக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
2015-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான அண்டால ராக்ஷசி என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் லாவண்யா திரிபாதி. தொடர்ந்து பிரம்மன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் என்ட்ரி ஆன இவர். அதனைத் தொடர்ந்து மாயவன் என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது டனல் என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வரும் லாவண்யா திரிபாதி, உத்திரபிரதேசத்தை பூர்வீகமாக கொண்டவர். தெலுங்கு சினிமாவில் அறிமுகமான இவர், பட வாய்ப்பு குவிந்ததால், தென்னிந்தியாவில் செட்டில் ஆகிவிட்டார். தற்போது நடித்து வரும் டனல் படத்தை தவிறந லாவண்யாவுக்கு வேறு படங்கள் இல்லாத நிலையில், அவர் திருமணத்திற்கு தாயராகி விட்டதாக கூறப்படுகிறது.

இதனை உறுதி செய்யும் விதமாக லாவண்யாவின் காதல் விவகாரம் தொடர்பான தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமாவின் முன்னணி இளம் நடிகரான வருண் தேஜ்-உடன் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான மிஸ்டர் என்ற படத்தில் இணைந்து நடித்த லாவண்யா திரிபாதி 2018-ல் வெளியான அந்தாராக்ஷ்யம் படத்திலும் இணைந்து நடித்திருந்தார்.
இந்த படங்களில் படப்பிடிப்பின்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக தகவல் வெளியான நிலையில், இருவர் தரப்பிலும் இது குறித்து எந்த தகவலும் வெளியிடவில்லை. இந்நிலையில், வருண் தேஜ் – லாவண்யா திரிபாதி ஜோடி தற்போது திருமணத்திற்கு தயாராகியுள்ளதாகவும், வரும் ஜூன் மாதம் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“