அவர் எனக்கு மாமா, நான் அவருக்கு செங்கேனி; இப்போதும் அப்படித்தான்: மணிகண்டன் பற்றி ஜெய்பீம் நடிகை நெகிழ்ச்சி!
நடிகர் மணிகண்டனுடனான தனது நட்பு குறித்து நடிகை லிஜோமோல் ஜோஸ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மணிகண்டனின் வளர்ச்சி குறித்து தான் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் மணிகண்டனுடனான தனது நட்பு குறித்து நடிகை லிஜோமோல் ஜோஸ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மணிகண்டனின் வளர்ச்சி குறித்து தான் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
'ஜெய்பீம்' திரைப்படத்தில் இணைந்த நடித்ததில் இருந்து மணிகண்டனுக்கும், தனக்குமான நட்பு குறித்து நடிகை லிஜோமோல் ஜோஸ் பல்வேறு தகவல்களை நினைவு கூர்ந்துள்ளார்.
Advertisment
தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை லிஜோமோல் ஜோஸ், தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். குறிப்பாக, 'ஜெய் பீம்' திரைப்படத்தில் அவர் வெளிப்படுத்திய 'செங்கேணி' கதாபாத்திரம், விமர்சகர்களின் பாராட்டுகளை அள்ளிக்குவித்து, சிறந்த நடிகைக்கான ஃபிலிம்பேர் விருதையும் அவருக்குப் பெற்றுத் தந்தது.
லிஜோமோல் ஜோஸின் நடிப்பு பயணம் 2016 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான 'மகேஷிண்டே பிரதிகாரம்' மூலம் தொடங்கியது. இந்தப் படம் பரவலான பாராட்டுகளை பெற்றது. அதே ஆண்டில் வெளியான 'கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன்' என்ற திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து தனது திறமையை அவர் வெளிப்படுத்தினார்.
2017 ஆம் ஆண்டு 'ஹனி பீ 2.5' படத்தில் நடிகை பாவனாவின் தனிப்பட்ட மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்தார். பின்னர், 2018 ஆம் ஆண்டு மம்முட்டியுடன் இணைந்து 'ஸ்ட்ரீட் லைட்ஸ்' படத்தில் நடித்த லிஜோமோல், 2019 ஆம் ஆண்டு சித்தார்த்துக்கு ஜோடியாக 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
Advertisment
Advertisements
லிஜோமோல் ஜோஸின் திரை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது 2021 ஆம் ஆண்டு வெளியான 'ஜெய் பீம்' திரைப்படம். நடிகர்கள் மணிகண்டன் மற்றும் சூர்யாவுடன் இந்தப் படத்தில், பழங்குடியின இருளர் சமூகத்தைச் சேர்ந்த 'செங்கேணி' என்ற கதாபாத்திரத்தில் லிஜோமோல் நடித்தார். பழங்குடி மக்களின் துயரங்களையும், அவர்களின் வலிகளையும் தனது நடிப்பால் அப்படியே பிரதிபலித்து, ரசிகர்களின் மனதை உலுக்கினார். அவரது உணர்வுபூர்வமான நடிப்பு விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டதுடன், தேசிய அளவிலும் கவனத்தை ஈர்த்தது.
இந்த சூழலில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நடிகர் மணிகண்டனுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மற்றும் தங்கள் நட்பு குறித்து லிஜோமோல் ஜோஸ் தெரிவித்துள்ளார். அதன்படி, "திரைத்துறையில் மணிகண்டனின் வளர்ச்சியை பார்ப்பதற்கு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. 'ஜெய்பீம்' திரைப்படத்தில் அவரை மாமா என்று அழைத்தேன். ஆனால், தற்போது வரை நிஜமாகவும் அவரை அவ்வாறு தான் அழைக்கிறேன்.
அவரும் என்னை செங்கேணி என்று அந்தப் பாத்திரத்தின் பெயர் கொண்டு அழைக்கிறார். அந்த அளவிற்கு இருவரும் பழகி வருகிறோம். என் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தொழில் ரீதியாக வளர்ச்சி வரும் போது எப்படி மகிழ்ச்சியாக இருக்குமோ, அதே போன்று தான் மணிகண்டனின் வளர்ச்சியும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது" என அவர் தெரிவித்துள்ளார்.