யார் இந்த நடிகை மதுபாலா? இவருக்கு ஏன் கூகுள் இன்று டூடுல் வைத்தது?

actress madhubala birthday : மறைந்த நடிகை மதுபாலா பிறந்தநாள் இன்று.

Actress Madhubala birthday, நடிகை மதுபாலா
Actress Madhubala birthday, நடிகை மதுபாலா

பாலிவுட்டின் பிளாக் அண்ட் வொயிட் காலத்தில் தனது அழகாலும் நடிப்பாலும் அனைவரையும் தன்வசமாக்கிய மறைந்த நடிகை மதுபாலா பிறந்தநாள் இன்று.

மும்தாஜ் பேகம் ஜெகான் தேஹலவி என்ற இயர்பெயரை பெற்ற மதுபாலாவின் 86வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு கூகுள் டூடுல் ஒன்றை தனது முகப்பு பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தனது 9 வயதில் இளம் மும்தாஜ் என அறிவிக்கப்பட்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானர்.

யார் இந்த நடிகை மதுபாலா?

பாலிவுட் திரைப்படங்களின் அழகு பதுமை என புகழ்பெற்ற நடிகையாக விளங்கிய மதுபாலாவின் இயற்பெயர் மும்தாஜ் பேகம் ஜெகான் தேஹலவி ஆகும். இவர் பிப்ரவரி 14, 1933 ஆம் ஆண்டில் டெல்லியில் பிறந்தார். தனது 9 வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், தனது 14வது வயதில் நடித்த நீல் கமல் திரைப்படத்தின் பிறகு மதுபாலா என்ற பெயரை பெற்றார்.

தனது இளம் வயதிலே புகழ்பெற்ற நடிகையாக விளங்கிய மதுபாலா, நடிப்பில் வெளியான மஹால் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று, இவரின் புகழை உயர்த்தியது. தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்த மதுபாலா பிறப்பிலே இதயம் தொடர்பான நோயுடன் பிறந்ததாக தெரியவந்தது.

71 திரைப்படங்களில் மட்டும் நடித்த மதுபாலா மிகவும் பிரபலமாக விளங்கினார். இவர் 1951 முதல் 1956 வரை ராஜ் கபூர் உடன் காதல் தொடர்பான விவகாரங்களில் சிக்கினார் என செய்திகள் வெளிவந்த நிலையில் , தனது தந்தையின் கடுமையான கட்டுபாட்டால் உறவை முறித்துக் கொண்டார். அதன்பிறகு 960 ஆம் ஆண்டு கிஷோர் குமாரை திருமணம் செய்துக் கொண்டார்.

இவருடைய முகல்-ஏ-ஆஸம் மற்றும் பர்ஸாத் கி ராத் மிகப்பெரிய வெற்றிப்படங்களாக விளங்கின, இந்நிலையில் 1969 ஆம் ஆண்டு பிப்ரவரி 23ந் தேதி தனது 36வது வயதில் உடல்நிலை குறைபாட்டால் மரணத்தை தழுவினார்.

நடிகை மதுபாலா

“The Biggest Star in the World” என்ற பெருமையை தியேட்டர் ஆர்ட்ஸ் இதழ் மூலம் பெற்ற மதுபாலா மிகப்பெரிய நடிகையாக வலம் வந்தார். 2008 ஆம் ஆண்டில் மதுபாலாவின் உருவம் பொதித்த நினைவுத் தபால்தலை வெளியிடப்பட்டது. அவரின் பிறந்தநாளான இன்று அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், கூகுள் ஒரு அழகான டூடுலை வெளியிட்டுள்ளது.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Actress madhubala birthday google doodle

Next Story
காத்திருந்து காதலர் தினத்தில் உண்மையை உடைத்த ஆர்யா… அவரே சொல்லிட்டாருArya Marriage Date
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com