/tamil-ie/media/media_files/uploads/2022/12/Madhu-Bala.jpg)
பிரபுதேவா, மதுபாலா
ரோஜா, ஜென்டில்மேன், மிஸ்டர் ரோமியோ என 1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மதுபாலா. சின்னச் சின்ன ஆசை, சிறகடிக்க ஆசை என பட்டிதொட்டியெங்கும் ஒலித்தவர்.
இவர் அண்மையில் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் பிரபுதேவாவுடன் நடிக்கும் போது தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.
அதில், “பிரபுதேவா உடன் நடிக்கும்போது பாடல் காட்சி ஒன்றில் அவருடன் டான்ஸ் ஆட எனக்கு 2 மணி நேரம் பயிற்சி அளித்தார்.
அவருடன் என்னால் ஆட முடியாது எனக் கூறி பிரபுதேவா இரண்டு மணி நேரம் பயிற்சி அளிக்க செய்துள்ளார். இது எனக்க மன வருத்தத்தை ஏற்படுத்தியது.
விட்டுக் கொடுப்பது என்பது வேறு, அடிபணிவது என்பது வேறு. எதில் விட்டுக் கொடுக்கிறோம் என்பதும் முக்கியம்தான்” என்றார்.
மேலும் தனது ஆரம்ப கால சினிமா வாழ்க்கை குறித்து பேசிய மதுபாலா, பாலசந்தர், மணி ரத்னம் மூலமாக தமிழ் சினிமா துறைக்குள் வந்தேன்.
நடிகை ஹேமமாலியை பார்த்துதான் நடிக்க வந்தேன். அந்தக் காலத்தில் திருமணத்துக்கு பின்னர் நடிகைகள் நடிப்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால் தற்போது தொடர்ந்து நடிக்கிறார்கள்” என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.