scorecardresearch

சிவப்பு நிற புடவையில் ரவிக்கை இல்லாமல் ஓவியம் போல இருக்கும் மடோனா செபாஸ்டியன்!

சமீபத்தில் மடோனா இன்ஸ்டாவில் பகிர்ந்த படங்கள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Madonna Sebastian
Actress madonna Sebastian looks gorgeous in her traditional photoshoot

தமிழில் காதலும் கடந்து போகும் படத்தின் மூலம் அறிமுகமான பிரேமம் நடிகை, மடோனா செபாஸ்டியன் சமீபத்தில் தனது பாரம்பரிய போட்டோஷூட் மூலம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் மடோனாவுக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. மடோனாவும், அதில் அடிக்கடி தன் போட்டோஷூட்கள் மூலம் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைக்க தவறுதில்லை.

இந்நிலையில் சமீபத்தில் மடோனா இன்ஸ்டாவில் பகிர்ந்த படங்கள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அதில் மடோனா சிவப்பு நிற புடவையில், ரவிக்கை இல்லாமல் இருந்தாலும், பராம்பரிய உடையில் மிகவும் அழகாக இருக்கிறார். நியூட் லிப்ஸ், டஸ்கி மேக்கப் உடன், கை மற்றும் விரல்களில் தங்க ஆபரணங்களை அணிந்து, பார்க்க ஒரு ஒவியம் போல இருக்கிறார்.

மடோனா இந்த படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டதிலிருந்து, ரசிகர்கள் லைக்குகளை வாரி வழங்கி வருகின்றனர்.

தொழில் ரீதியாக, மடோனாவின் திரைப்பட வாழ்க்கை தமிழில் சரியாகப் போகவில்லை. அவர் கடைசியாக நானி மற்றும் சாய் பல்லவி நடித்த ஷியாம் சிங்க ராய் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்தார். அடுத்து சசிகுமாருடன் கொம்பு வெச்ச சிங்கம்டா படத்தில் நடிக்கிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Actress madonna sebastian looks gorgeous in her traditional photoshoot