தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் கடந்த மாதம் மோசடி வழக்கில் கைதாகி சிறைக்கு சென்ற நிலையில், அவர் ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். இவருடைய மனைவி மகாலட்சுமி தனது கணவர் ரவீந்தர் சிறைக்கு சென்றிருந்தபோது, அவரை விட்டு பிரிந்து இருந்தாரா என்று உணர்ச்சிகரமான ஒரு தரமான இன்ஸ்டா பதிவிட்டுள்ளார்.
பிரபல சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனும் சீரியல் நடிகை மகாலட்சுமியும் திருமணம் செய்து கொண்டதாக அறிவித்தது யூடியூப்களில் பிரபலமாக பேசப்பட்டது. இருவரும் சில யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்தனர். நடிகை மகாலட்சுமி தனது கணவர் பற்றி இன்ஸ்டாவில் பதிவிட்டு வந்தார்.
இந்த சூழ்நிலையில், பிரபல சினிமா தயாரிப்பாளரும் சீரியல் நடிகை மகாலட்சுமியின் கணவருமான ரவீந்தர் சந்திரசேகரன் கடந்த மாதம் பாலாஜி ஃபோர்டு என்ற தொழிலதிபரை போலி ஆவணங்கள் தயாரித்து ரூ. 15.83 கோடி மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டு சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். இதையடுத்து அவருடைய மனைவி நடிகை மகாலட்சுமி அவருடன் இருக்கும் ஒரு படத்தைப் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். மேலும், அவர் ஒரு உணர்ச்சிகரமான தரமான இன்ஸ்டா பதிவை எழுதியுள்ளார்.
“என்னில் புன்னகையை வரவழைக்க நீ தவறுவதில்லை.. எவர் மீதும் அன்பு கொள்வதற்கு காரணம் நம்பிக்கை; ஆனால், இங்கே என்னை விட நம்பிக்கை உன்னை நேசிக்கிறது!! அதே அன்பைப் பொழிந்து, முன்பு போல என்னைக் காத்து.. லவ் யூ லோட்ஸ்ஸ்ஸ்ஸ் அம்மு ” என்று பதிவிட்டுள்ளார். இதன் மூலம், தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் ஜெயிலுக்கு சென்றிருந்தாலும் அவரை மனதளவில் பிரியவே இல்லை என்று மகாலட்சுமி ஒரு உணர்ச்சிகரமாக பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“