scorecardresearch

லேடி சூப்பர் ஸ்டார் எனக்கு பிடிக்கவில்லை… மீண்டும் சர்ச்சையில் மாளவிகா மோகனன்

நயன்தாராவைக் குறிக்கும் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற வார்த்தை தனக்குப் பிடிக்கவில்லை என்று சமீபத்தில் மாளவிகா மோகனன் கூறினார்.

லேடி சூப்பர் ஸ்டார் எனக்கு பிடிக்கவில்லை… மீண்டும் சர்ச்சையில் மாளவிகா மோகனன்

லேடி சூப்பர் ஸ்டார் என்ற வார்த்தை தனக்கு பிடிக்கவில்லை என்று நடிகை மாளவிகா மோகனன் கூறியுள்ளது நயன்தாரா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன் தொடர்ந்து விஜயுடன் மாஸ்டர், தனுஷூடன் மாறன் உள்ளிட்ட படங்களில் நடித்தார் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் தங்கலான் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். மேலும் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் மாளவிகா பிஸியாக நடித்து வருகிறார்.

இதனிடையே சமீபத்தில் மலையாள சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த மாளவிகாவிடம் அடுத்த லேடி சூப்பர் ஸ்டாராக யாரைக் குறிப்பீர்கள் என்று கேட்கப்பட்டது, இதற்கு பதில் அளித்துள்ள அவர், உண்மையைச் சொல்வதானால், எனக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற வார்த்தை பிடிக்கவில்லை. எல்லா நடிகர்களையும் சூப்பர் ஸ்டார் என்றுதான் அழைக்க வேண்டும். ‘லேடி’ என்ற வார்த்தை தேவையில்லை.

தீபிகா படுகோனை லேடி சூப்பர்ஸ்டார் அல்ல சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிடுகிறோம். ஆலியா பட் சூப்பர் ஸ்டார். கத்ரீனா கைஃப் சூப்பர் ஸ்டார். நாம் அவர்களை அப்படித்தான் அழைக்க முடியும் என்று கூறியிருந்தார். இதன் மூலம் மாளவிகா மோகனன் மறைமுகமாக நடிகை நயன்தாராவை குறிப்பிடுவதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தற்போது இது குறித்து விளக்கம் அளித்துள்ள மாளவிகா தனது கருத்து எந்த ஒரு குறிப்பிட்ட நடிகரைப் பற்றியது அல்ல என்றும் தான் பாலின பாகுபாட்டை சுட்டிக்காட்டியதாகவும் கூறியுள்ளார். மேலும், நயன்தாரா மீது எனக்கு மரியாதையும் அபிமானமும் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

நயன்தாரா தொடர்பான சர்ச்சைகளில் மாளவிகா சிக்குவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே ஒரு பேட்டியில், முன்னணி நடிகை ஒருவர், ஒரு படத்தின் காட்சியில் ஒரு மருத்துவமனையில் நோயாளியாக இருக்கும்போது மேக்கப்புடன் நடித்திருப்பார். இது உண்மைக்கு புறம்பானது என்று கூறியிருந்தார். இதில் மாளவிகா நயன்தாராவின் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்த ஜெய் சிம்ஹா என்ற தெலுங்கு படத்தில் இப்படி ஒரு காட்சி உள்ளது. இதை சுட்டிக்காட்டி மாளவிகா நயன்தாராவைத்தான் குறிப்பிடுகிறார் என்று நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தனர்.

அப்போது இதற்கு பதில் அளித்திருந்த நயன்தாரா இது ஒரு கமர்ஷியல் படம், இது மிகவும் யதார்த்தமாக இருக்க வேண்டியதில்லை என்று கூறியிருந்தார். அப்போது நயன்தாராவின் ரசிகர்களிடம் இருந்து மாளவிகா கடும் எதிர்ப்பை சந்தித்தார். இதனைத் தொடர்ந்து தற்போது மாளவிகாவின் கருத்து மீண்டும் நயன்தாரா ரசிகர்களிடம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Actress malavika mohanan clarifies her comments about lady superstar