/indian-express-tamil/media/media_files/2025/09/06/thiruttu-payale-malavika-2025-09-06-09-57-49.jpg)
நடிகை மாளவிகா, தான் நடித்த திரைப்படங்களில் மறக்க முடியாத படமாக இயக்குநர் சுசி கணேசனின் 'திருட்டுப் பயலே' திரைப்படத்தைக் குறிப்பிடுகிறார். குறிப்பாக, இந்தப் படத்தில் அவர் ஏற்றிருந்த வில்லி கதாபாத்திரம் அவருக்கு மிகவும் பிடித்தமானது என்றும், அதனை மிகுந்த ஆர்வத்துடன் நடித்து முடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
2006-ஆம் ஆண்டு வெளியான திருட்டுப் பயலே திரைப்படம், அன்றைய காலகட்டத்தில் பரவலாகப் பேசப்பட்ட ஒரு பரபரப்பான காதல் மற்றும் குற்றப் பின்னணி கொண்ட திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் ஜீவன், சோனியா அகர்வால், அப்பாஸ், மாளவிகா, விவேக் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படத்தில் வரும் வில்லத்தனமான கதாபாத்திரம், மாளவிகாவின் நடிப்புத் திறனுக்கு ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுத்தது.
தனது கவர்ச்சியான தோற்றத்திற்கு அப்பாஸ், கதாபாத்திரத்தின் எதிர்மறைப் பக்கத்தை மிக இயல்பாக வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்நிலையில் கோயம்புத்தூர் விலாக்ஸ் இன்ஸ்டா பக்கத்தில் பல சுவாரசியாமன தகவல்களை பகிர்ந்துள்ளார். வில்லி கதாபாத்திரத்தை மிகவும் ரசித்து நடித்ததற்கான முக்கியக் காரணம் நடிகர் அப்பாஸ் தான் என்று மாளவிகா மனம் திறந்து கூறியுள்ளார். அப்பாஸுடன் ஏற்கனவே நெருங்கிய நண்பராக இருந்ததால், தங்களுக்குள் இருந்த புரிதல் காரணமாக, திரையில் வரும் நெருக்கமான காட்சிகளில் கூட தங்களால் இயல்பாக நடிக்க முடிந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
படப்பிடிப்பு நேரத்தில் இருவரும் பேசிக்கொண்டது, சிரித்துக்கொண்டது போன்ற நிகழ்வுகளே அந்த கதாபாத்திரத்திற்குத் தேவையான உணர்வை வெளிப்படுத்த உதவியது என்றும், வேறு யாராவது உடன் நடித்திருந்தால் இந்தளவுக்கு இயல்பான நடிப்பு வெளிப்பட்டிருக்காது என்றும் மாளவிகா தெரிவித்திருக்கிறார். இதன் மூலம், ஒரு படத்தின் வெற்றிக்கு கதாபாத்திரங்களுக்கு இடையேயான புரிதலும், நிஜ வாழ்க்கைத் தொடர்புகளும் எவ்வளவு முக்கியம் என்பதை மாளவிகா உணர்த்தியுள்ளார்.
மாளவிகா தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார். அவர் 'திருட்டுப் பயலே' திரைப்படத்தில் ரூபானி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் ஆனந்த பூங்காற்றே, வெற்றி கொடி கட்டு, சந்திரமுகி, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், குருவி, நான் அவன் இல்லை மற்றும் வியாபாரி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.