கால்கள் முழுவதும் அட்டைப்பூச்சி... கடினமாக இருந்தது; பம்பாய் பட பாடல் ‘ஷூட்’டை நினைவுகூர்ந்த மனிஷா கொய்ராலா
இயக்குனர் மணிரத்னத்தின் பம்பாய் (1995) படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகை மனிஷா கொய்ராலா அறிமுகமானார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த "உயிரே, உயிரே" மற்றும் "கண்ணாளனே" ஆகிய மிகவும் விரும்பப்பட்ட பாடல்களுக்கான படப்பிடிப்பு நாட்களை நடிகை மனிஷா கொய்ராலா நினைவு கூர்ந்தார்.
இயக்குனர் மணிரத்னத்தின் பம்பாய் (1995) படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகை மனிஷா கொய்ராலா அறிமுகமானார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த "உயிரே, உயிரே" மற்றும் "கண்ணாளனே" ஆகிய மிகவும் விரும்பப்பட்ட பாடல்களுக்கான படப்பிடிப்பு நாட்களை நடிகை மனிஷா கொய்ராலா நினைவு கூர்ந்தார்.
இயக்குனர் மணிரத்னத்தின் பம்பாய் படம் வெளியாகி 29 வருடங்களை அண்மையில் நிறைவு செய்தது. இந்த படத்தின் கதாநாயகி மனிஷா கொய்ராலா, அட்டைபூச்சிகள் நிறைந்த காட்டில் நடக்க வேண்டியிருந்ததால், படத்தின் படப்பிடிப்பு எவ்வளவு கடினமாக இருந்தது என்பதை நினைவு கூர்ந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த “கண்ணாளனே” பாடல், ராட்சத அலைகள் பாறைகளைத் தாக்குவதற்கு இடையே படமாக்கப்பட்டதை நினைவு கூர்ந்தார்.
O2 இந்தியாவிடம் பேசிய நடிகை மனிஷா கொய்ராலா, கண்ணாளனே பாடல் படப்பிடிப்பின் போது தனது கண்ணில் ஒரு கண்கட்டி இருந்ததையும் அவர் வலியில் இருந்ததையும் நினைவு கூர்ந்தார். மனிஷா கொய்ராலா கூறுகையில், “எனக்கு கண்ணாளனே பாடப் படப்பிடிப்பி நினைவு இருக்கிறது, நாங்கள் அதை மைசூரில் அல்லது நாங்கள் சென்றிருந்த ஒரு பகுதியில் படமாக்கினோம் என்று நினைக்கிறேன். என் கண்ணில் ஒரு பெரிய கண்கட்டி இருந்தது எனக்கு நினைவிருக்கிறது, நான் படப்பிடிப்பு ரத்து செய்யப்படும் என்று நினைத்தேன், ஆனால், இல்லை, அந்த நேரத்தில் ராஜீவ் மேனன் புகைப்பட இயக்குனர் என்று நான் நினைக்கிறேன், நான் அவரிடம் விளக்கினேன் என் கண்ணில் ஒரு பெரிய கண்கட்டி உள்ளது. ஆனால், அவர் என்னை கொஞ்சம் மேக்கப் போடச் சொன்னார், 'கவலைப்படாதே, நான் அதைப் பார்க்கிறேன், நான் பார்த்துக் கொள்கிறேன்' என்றார். என் கண்ணில் இருந்த கண்கட்டியை யாரும் கவனிக்கவில்லை.” என்று கூறினார்.
மேலும், மனிஷா கொய்ராலா கூறுகையில், “நீங்கள் ஒரு சிறந்த குழுவுடன் பணிபுரியும் போது, எல்லா தடைகளையும் மீறி அவர்கள் நல்ல விஷயங்களை வெளிப்படுத்துகிறார்கள் என்று நான் உணர்கிறேன்” என்று கூறினார்.
Advertisment
Advertisements
பம்பாய் படத்தில் இருந்து இசை பிரியர்களின் அன்பைப் பெற்ற மற்றொரு பாடல் ‘உயிரே... உயிரே...’ இந்த பாடலை அட்டை பூச்சிகள் நிறைந்த காட்டில் படமாக்கியது எவ்வளவு கடினமாக இருந்தது என்பதை பகிர்ந்து கொண்ட மனிஷா, “உயிரே உயிரே பாடல் மிகவும் கடினமான பாடல். ஒரு பகுதி இருந்தது, இரண்டு இடங்கள், மிகவும் கடினமாக இருந்தது (படப்பிடிப்பு செய்வதற்கு). ஒன்று பாறைகளில் இருந்தது, அந்த பாறைகளில் கடல் அலை தாக்கியது மற்றும் பெரிய தெறிப்புகள் வருகின்றன, அது மிகவும் ஆபத்தானது, ஆனால், எப்படியோ நாங்கள் அதைப் படம்பிடிக்க முடிந்தது, நாங்கள் அதைச் சரிசெய்தோம், எல்லாம் சரியாகிவிட்டது. மற்ற இடம்... அது எந்தப் பகுதி என்று எனக்குத் தெரியவில்லை, நாங்கள் அடர்ந்த காட்டின் நடுவில் இருந்தோம், அது அட்டைப்பூச்சிகளால் நிறைந்திருந்தது.
நீங்கள் ஒரு அடி எடுத்து வைத்தாலும், சிறிது தூரம் நடந்தால், உங்கள் கால் முழுவதும் அட்டைப் பூச்சிகள் இருக்கும். (பாடலுக்கு) நான் பாவாடை அணிய வேண்டியிருந்தது, அந்த நீலப் பாவாடையுடன் நான் காட்டில் ஓட வேண்டியிருந்தது ... அதில் அட்டைப்பூச்சிகள் நிறைந்திருந்தது, நிறைய சிரமம் இருந்தது. ஆனால், ஒரு ஐடியா கண்டுபிடித்தோம், நீங்கள் உப்பு போட்டுக்கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். நாங்கள் யாருடையதோ பூட்ஸ் அணிந்திருந்தோம், கடினமான சூழ்நிலையில் எப்படி பயணிப்பது என்று நாங்கள் கண்டுபிடித்தோம்” என்று மனிஷா கொய்ராலா கூறினார்.
இயக்குனர் மணிரத்னத்தின் பம்பாய் திரைப்படம் 1995-ம் ஆண்டு மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. பம்பாய் கலவரத்தின் போது பம்பாயில் இரு மதங்களுக்கிடையேயான குடும்பத்தின் கதையை இப்படம் கூறுகிறது. படத்தின் இசையை இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். மேலும், இந்த படத்தின் ஆல்பம் அவரது மிகவும் விரும்பப்பட்ட படைப்புகளில் ஒன்றாகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“