நடிகை மஞ்சிமா மோகன் தன்னுடைய குழந்தை பருவ புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட ரசிகர்கள் யார் இந்த கொழுகொழு குழந்தை என்று கேட்டு வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வரும் நடிகை மஞ்சிமா மோகன் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கோலிவுட், மோலிவுட், டோலிவுட் என மூன்று மொழி படங்களிலும் கலக்கி வரும் நடிகை மஞ்சிமா மோகன், தமிழ் சினிமாவில், அச்சம் என்பது மடமையடா, சத்ரியன், இப்படை வெல்லும், ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு சினிமாக்களிலும் மஞ்சிமா மோகன் பிசியாக நடித்து வருகிறார். சினிமாவில் பாந்தமாக நடிக்கும் மன்சிமா சமூக ஊடகங்களில் மாடர்னாக புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.
மஞ்சிமா மோகன் தனது தந்தையுடன் குழந்தையாக இருக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளிட்டுள்ளார். கொழுகொழுவென அழகாக இருக்கும் குழந்தையின் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் இது நீங்களா என்று மஞ்சிமா மோகனிடம் கேட்டு மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.