New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/30/A6aTom45viSBirO0QcFY.jpg)
உலக நடன தினத்தையொட்டி குச்சிப்புடி ஆடி நடிகை மஞ்சு வாரியர் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
உலகெங்கும் ஏப்ரல் 29-ம் தேதி சர்வதேச நடன தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் புகழ் பெற்ற பாலே நடனக் கலைஞர் ஜீன் ஜார்ஜஸ் கோவ்ரே பிறந்த நாள் என்பதால் அவரது நினைவைப் போற்றும் விதமாக, அவரது பிறந்த தினத்தை சர்வதேச நடன தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்நிலைய்ல் சர்வதேச நடன தினத்திற்கு நடிகை மஞ்சு வாரியர் குச்சிப்புடி நடனமாடி அதை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் அவர், " இன்னும் தவறுகளைச் செய்து கொண்டே இருக்கிறேன், அவற்றிலிருந்து கற்றுக்கொள்கிறேன்" என்றும் பகிர்ந்துள்ளார்.
மஞ்சு வாரியர் மலையாள சினிமாவின் முன்னனி நடிகைகளில் ஒருவராக உள்ளார். இவர் தமிழிலும் அசுரன், துணிவு, விடுதலை 2, வேட்டையன் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது ஆர்யா, கவுதம் கார்த்திக் கூட்டணியில் உருவாகி வரும் 'மிஸ்டர் எக்ஸ்' படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் உலக நடன தினத்தை முன்னிட்டு நடிகை மஞ்சுவாரியர் குச்சிப்புடி நடனமாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.