மஞ்சு வாரியார் மீது கை வைத்த நபர்; கூட்ட நெரிசலில் நடந்த சம்பவம்: வைரல் வீடியோ!

வீடியோவில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மஞ்சு வாரியரின் இடுப்பைத் தவறாகத் தொடுவது பதிவாகியுள்ளது.

வீடியோவில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மஞ்சு வாரியரின் இடுப்பைத் தவறாகத் தொடுவது பதிவாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
Manju Warrior

பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை மஞ்சுவாரியாரிடம் ஒரு நபர் தவறாக அவரது உடலை தொட்டது தொடர்பான வீடியோ பதிவு இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சினிமா உலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கும் நடிகை மஞ்சு வாரியர்.  மலையாள சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்த இவர், அசுரன், துணிவு, வேட்டையன் என சில வெற்றிப்படங்களில் நடித்தள்ளார். தனுஷுடன் இவர் நடித்த 'அசுரன்' திரைப்படம் தமிழ் திரையுலகில் இவருக்கு ஒரு சிறப்பான அறிமுகத்தைக் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து அஜித் நடித்த 'துணிவு' மற்றும் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள 'வேட்டையன்' போன்ற பெரிய படங்களில் நடித்திருந்தார்.

தற்போது ஆர்யா, கௌதம் கார்த்திக் நடிப்பில் தயாராகி வரும் மிஸ்டர் எக்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே சமீபத்தில், ஒரு கடையின் திறப்பு விழாவில் மஞ்சு வாரியர் கலந்துகொண்டார். அங்கு திரண்டிருந்த ஏராளமான ரசிகர்களைப் பார்த்து அவர் கைகாட்டி வரவேற்றார். இந்த நிகழ்வின்போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மஞ்சு வாரியரின் இடுப்பைத் தவறாகத் தொடுவது பதிவாகியுள்ளது.

இந்த விரும்பத்தகாத சம்பவம் நிகழ்ந்தபோதும், மஞ்சு வாரியர் தனது அமைதியைக் விட்டுவிடாமல் ஒரு ரசிகையுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். பின்னர் உடனடியாக அந்த இடத்தைவிட்டுச் சென்றார். அந்த நபர் ஆணா பெண்ணா என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. இந்தச் சம்பவம் இணையத்தில் பலத்த கண்டனங்களை உருவாக்கியுள்ளது. பலரும் அந்த நபரின் அநாகரீகமான செயலை விமர்சித்தும், பொது இடங்களில் பெண் பிரபலங்களின் பாதுகாப்பு குறித்தும் கவலை தெரிவித்தும் வருகின்றனர்.

Advertisment
Advertisements

இந்த வருத்தமான நிகழ்வு, பொது நிகழ்ச்சிகளில் பிரபலங்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குவது மற்றும் அங்குள்ளவர்கள் கண்ணியத்துடன் நடந்துகொள்வது எவ்வளவு முக்கியம் என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.

Manju Warrier

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: