Advertisment

ஒரு லைனாவது பாடணும், இல்லனா விட மாட்டேன்: மிரட்டிய பி.சுசீலா; மேடையை அதிர வைத்த மனேரமா!

எஸ்.ஜானகிக்கு நடந்த விழாவில், பி.சுசீலா இணைந்து பாடல் பாடியபோது, திடீரென என்டரி ஆன மனேரமா பாடல் பாடி அசத்திய வீடியோ வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
P Suseela Janaki and manorama

எஸ்.ஜானகி - பி.சுசீலா - மனேரமா

நடிப்பில் முத்திரை பதித்து அனைவராலும் ஆச்சி என்று அழைக்கப்பட்ட மனோரமா நடிப்பு மட்டுமல்லாமல் பாடல்கள் பாடுவதிலும் திறமைசாளியாக இருந்த நிலையில், மேடையில் பி.சுசீலா மற்றும் எஸ்.ஜானகிக்கு நிகராக மனோரமா பாடல் பாடிய வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமா உலகில் ஆச்சி என்று அழைக்கப்படும் மனோரமா சினிமா உலகில் 1500 படங்களுக்கு மேல் நடித்து யாரும் எட்டாத உச்சத்தை எட்டியவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். க்ளாசிக் சினிமாவில் அறிமுகமாகி இன்றைய இளம் தலைமுறை நடிகர்கள் வரை பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள மனோரமாக அனைவருடனும் எளிமையாக பழகும் மனம் கொண்டனர்.

நாடகங்களில் நடித்து திரைப்படத்தில் நடிக்க தொடங்கிய மனோரமா, 1958-ம் ஆண்டு மாலையிட்ட மங்கை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கண்ணதாசன் கதை மற்றும் திரைக்கதை வசனத்தில் வெளியான இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், மனோரமாவுக்கு பெரிய பாராட்டுக்களையும் குவித்தது.

அதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள மனேரமா, நாகேஷ், தொடங்கி பல காமெடி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். நடிப்பு மட்டுமல்லாமல் பாடல் பாடுவதிலும் வல்லவராக இருந்த மனோரமா பல படங்களில் தனது இனிமையான குரலின் மூலம் பாடல்கள் பாடி வியக்க வைத்தவர்.

அந்த வகையில் இவர் பாடிய, 1963-ம் ஆண்டு கண்ணதாசன் தயாரிப்பு மற்றும் கதையில் வெளியான ரத்த திலகம் என்ற படத்தில் தனது பாடல் பாடும் திறமையை வெளிப்படுத்தியிருந்தார். அதனைத் தொடர்ந்து, எம்.எஸ்.வி, சங்கர் கணேஷ், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், தேவா, வித்யாசாகர் உள்ளிட்ட பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்கள் பாடியுள்ள மனேரமா, கடைசியாக கடந்த 2006-ம் ஆண்டு வெளியான பாசக்கிளிகள் படத்தில் பாடல் பாடியிருந்தார்.

இதனிடையே க்ளாசிக் சினிமாவில் முன்னணி பாடகிகளாக இருந்த பி.சுசீலா எஸ். ஜானகி ஆகியோர் ஒரே மேடையில், நிகழ்ச்சியில் இருந்தபோது அங்கு மனோரமா என்ட்ரி ஆகிறார். அப்போது பி.சுசீலா, வா வாத்தியாரே ஊட்டாண்ட, நீ வராகாட்டிலும் விட மாட்டேன் என்று பாட, ஜாம் பஜார் ஜக்கு நான் சைதாபேட்ட கொக்கு என்று எஸ்.ஜானகி பாடி மனோரமாவை வரவேற்கின்றனர்.

அதன்பிறகு, நீங்க பாடலனா நான் விட மாட்டேன் நீங்களும் ஒரு சிங்கர் என்று சொல்லி பி.சுசீலா மனோரமாவை பாட சொல்ல, ரெண்டு அருமையாக சிங்கர்களுக்கு முன்னாடி நான் இத்தாத்த பாடுறது என்று சொல்லும் மனோரமாக, இம்மாம்பெரிய சபையிலே நான் இன்னாத்த பாடுறது என்று ஒரு பாடலை பாடுகிறார். இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment