டபுள் மீனிங் வசனம், சங்கடப்பட்ட ஆச்சி; மக்கள் ரசிக்கல, ஆனா... மனோரமா த்ரோபேக்!

தமிழ் சினிமாவில் இரட்டை அர்த்த வசனங்கள் ஆதிக்கம் செய்வது குறித்து நடிகை மனோரமா வருத்தத்துடன் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் இரட்டை அர்த்த வசனங்கள் ஆதிக்கம் செய்வது குறித்து நடிகை மனோரமா வருத்தத்துடன் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
manorama

டபுள் மீனிங் வசனம், சங்கடப்பட்ட ஆச்சி; மக்கள் ரசிக்கல, ஆனா... மனோரமா த்ரோபேக்!

தென்னிந்திய சினிமாவில் நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் நடிப்பதில் ஜாம்பவானாக விளங்கியவர் மனோரமா. 'ஆச்சி' மனோரமா என அன்புடன் அழைக்கப்படும் இவர், பல ஆண்டுகளாக திரைத்துறையில் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார். ஏறத்தாழ, 1,500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் மனோரமா. 

Advertisment

மனோரமாவின் திறமைக்கு எண்ணற்ற விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. தனது நடிப்பு மூலம் இந்திய திரையுலகை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் மனோரமா என்று கூறினால், மிகையாகாது. அந்த அளவிற்கு அவர் ஏற்று நடித்த பாத்திரங்கள் அழுத்தமானவையாக இருந்தது. முன்னணி நடிகர்கள் அத்தனை பேருடனும் இணைந்து நடித்த பெருமை மனோரமாவிற்கு இருக்கிறது. 

இன்று வரை பல நடிகைகளுக்கு இன்ஸ்பிரேஷனாக மனோரமா விளங்குகிறார். இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் பழைய படங்களை எல்லாம் நாங்கள் நம்பி பார்க்கலாம். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் எப்படி வந்தது என மனோரம்மாவிடம் தொகுப்பாளர் கேட்டதற்கு அவர் வருத்தத்துடன் பதிலளித்துள்ளார் .

அவர் பேசியதாவது, ”இரட்டை அர்த்த வசனங்கள் எப்படி தமிழ் சினிமாவில் வந்தது என்று தெரியவில்லை. ரசிகர்கள் இரட்டை அர்த்த வசனங்களை ரசிக்கிறார்கள் என்று நடிகர்கள் நினைக்கிறார்கள் ஆனால், ரசிகர்கள் அதை ரசிக்கவில்லை. அந்த நேரத்தில் மக்கள் எழுந்து வெளியவா போக முடியும். சரி எதோ பேசுகிறார்கள் பேசட்டும் என்று விட்டுவிட்டார்கள் என்று நினைக்கிறேன். அதனால் நடிகர்களும் தைரியமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

Advertisment
Advertisements

தமிழ் சினிமாவில் இரட்டை வசனங்கள் பேசும் நிலைமை வந்ததற்கு நான் மிகவும் வருத்தப்படுகிறேன். அந்த காலத்தில் தங்கவேலு அண்ணா நீ போ, நீ  நல்லாயிருக்க மாட்ட அப்படி கூட சொல்லமாட்டார்கள். அந்த வார்த்த கூட சொல்லக் கூடாது. நாம் வணக்கம் என்றால் நல்லா இரு. நல்லா இருமா அப்படிதான் சொல்வார்கள். எந்தவொரு அபசகுணமான வார்த்தையும் சொல்லவே மாட்டாங்க அவர்கள் எல்லாம்.

அப்படிப்பட்ட கலைஞர்கள் அவர்கள் எல்லாம். அப்பவே எவ்வளவு பெரிய பெயர் வாங்கினார்கள். இப்போதுல்ல நடிகர்கள் இதுதான் காமெடி என்று நினைத்துக் கொண்டு நடிக்கிறார்கள். அதற்கு நான் வருத்தப்படுறேன். வேறு என்ன செய்வது என்று தெரியவில்லை” என்றார்.

Cinema Manorama

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: