Advertisment

ரஜினி உடன் சூப்பர்ஹிட் படம்; கமல் உடனும் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா: இந்த படம் தெரியுமா?

கமல்ஹாசனின் மகளாக ஒரு இந்திப் படத்தில் மீனா நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

author-image
WebDesk
New Update
kamal meena.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

90ஸ்களில் நடிகை மீனா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர். முன்னணி நடிகர்கள் ரஜினி, கமல், பிரபு, சரத்குமார் உள்பட பல்வேறு நடிகர்களுடன் நடித்து ஏராளமான வெற்றிப் படங்களை கொடுத்தவர் மீனா. ரஜினி உடன் அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானார். இந்த படம் சூப்பர்ஹிட் அடித்தது.

Advertisment

பாடல்கள், வசனம் என அத்ததையும் ஹிட் ஆனது. பின்னர் வளர்ந்து ரஜினி உடன் கதாநாயகியாகவும் மீனா நடித்தார். எஜமான், முத்து போன்ற படங்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.  

Hindi k.jpg

இந்நிலையில் நடிகை மீனா ரஜினி உடன் குழந்தை நட்சத்திரமாக நடித்ததைப் போல கமல் உடனும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என்று தகவல் கூறப்படுகிறது. கமல்ஹாசனின் மகளாக 'யாத்கார்' என்ற இந்திப் படத்தில் மீனா நடித்துள்ளதாக  சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியுள்ளது. இது தொடர்பான புகைப்படமும் வெளியாகி உள்ளது.  மீனா தமிழ் மட்டுமல்லாது கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Kamalhaasan Meena
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment