வித்யாசாகர் உடலை கட்டி அணைத்து பிரியா விடை கொடுத்த மீனா: கண்ணீர் காட்சிகள்

மீனாவின் கணவர் வித்யாசாகர் உடலுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், சரத்குமார், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.

மீனாவின் கணவர் வித்யாசாகர் உடலுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், சரத்குமார், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.

author-image
WebDesk
New Update
வித்யாசாகர் உடலை கட்டி அணைத்து பிரியா விடை கொடுத்த மீனா: கண்ணீர் காட்சிகள்

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்த மீனா குடுநு்து 2009-ம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த கம்பியூட்டர் என்ஜினியர் விததியாசாகர் என்பரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். இவர் தெறி படத்தில் நடிகர் விஜய்க்கு மகளாக நடித்திருந்தார்.

Advertisment

சென்னை கோட்டூர்புரம் பகுதியில் உள்ள ஸ்ரீநகர் காலனி அவென்யூவில் மீனா தனது கணவர் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மீனாவின் கணவர் வித்தியாசாகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு நுரையீரல் பிரச்சினை ஏற்பட்டது.

இதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்த வித்யாசகர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இந்த மரண செய்தி மீனா ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மீனாவின் கணவர் வித்யாசாகர் உடலுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், சரத்குமார், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து நடிகை மீனா தகன மேடையில் இறுதி சடங்குகளை செய்தார் பின்னர்  தன் கணவரை கட்டி அணைத்த அவர் கண்ணீர் மல்க  பிரியா விடை  கொடுத்த காட்சி அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது.

Advertisment
Advertisements

இது தொடர்பான வீடியோ பதிவு சினியுலகம் இணையத்தில் நேரலையாக ஒளிபரப்பு செயப்பட்டு வருகிறது, இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது வலைதள பக்கத்தில் நடிகை மீனாவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Meena

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: