நடிகை மீனாவின் கணவர் சமீபத்தில் மரணமடைந்த நிலையில், திருமண நாளான இன்று அவர் வெளியிட்டுள்ள பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் நடிகை மீனா. தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட வேற்று மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழந்தார்.
இதனிடையே நடிகை மீனா கடந்த 2009ம் ஆண்டு வித்யாசாகர் என்பரை திருமணம் செய்துகொண்டார் இந்த தம்பதிக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த வித்யா சாகர் கடந்த ஜூன் 28-ந் தேதி திடீரென மரணமடைந்தார். அவரது உடலுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் அஞ்சலி செலுத்தினர்.
வித்யாசகரின் மறைவு மீனாவின் குடும்பத்தில் ஆறாத தழும்பாக மாறிவிட்ட நிலையில், ஜூலை 12-ந் தேதியான நேற்று நடிகை மீனா வித்யாசகர் தம்பதிக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் நிறைவு பெற்றது. இந்த முக்கியமான நாளில் கணவரை இழந்து தவித்து வரும் நடிகை மீனாவுக்கு பல தரப்பினர் ஆறுதல் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு திருமண நாளில் நடிகை மீனா தனது கணவர் வித்யாசகர் குறித்து இன்ஸ்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. இதில் வானவில் போல என் வாழ்வில் வந்து அதை அழகாக வண்ணமயமாக்கினாய் ஒன்றாக இருப்பதற்கு இது ஒரு அற்புதமான இடம். எனக்கு மிகவும் பிடித்த இடம். நீ கொடுத்த புன்னகையை எப்போதும் வைத்திருப்பேன். இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவை ரசிகர்கள் பலரும் வைரலாகி வரும் நிலையில், மீனாவுக்கு ஆறுதல் கூறி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“