'அந்த நடிகரை மாதிரி ஆளை திருமணம் செய்ய ஆசைப்பட்டேன்': மீனா

நடிகை மீனா பாலிவுட்டின் பிரபல நடிகர் மாதிரி ஆளை திருமணம் செய்ய ஆசைப்பட்டேன் என வெளிப்படையாகப் பேசியிருப்பது ரசிகர்கள் இடையே கவனம் பெற்றுள்ளது.

நடிகை மீனா பாலிவுட்டின் பிரபல நடிகர் மாதிரி ஆளை திருமணம் செய்ய ஆசைப்பட்டேன் என வெளிப்படையாகப் பேசியிருப்பது ரசிகர்கள் இடையே கவனம் பெற்றுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Actress Meena, Meena husband, Meena interview, Meena marriage, Meena on Hrithik Roshan, Meena open talks crush on Hrithik Roshan, Meena speech, Meena likes wedding Hrithik Roshan, மீனா ஓபன் டாக், நடிகை மீனா, மீனா திருமணம், ரித்திக் ரோஷன், பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன், ரித்திக் ரோஷன் மாதிரி ஆளை திருமணம் செய்ய விரும்பிய மீனா, actress meena open talks likes Hrithik Roshan,

நடிகை மீனா

நடிகை மீனா பாலிவுட்டின் பிரபல நடிகர் மாதிரி ஆளை திருமணம் செய்ய ஆசைப்பட்டேன் என வெளிப்படையாகப் பேசியிருப்பது ரசிகர்கள் இடையே கவனம் பெற்றுள்ளது.

Advertisment

நடிகை மீனா, தனது வீட்டில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தபோது அவருடைய அம்மாவிடம் தனக்கு மாப்பிள்ளை பிரபல பாலிவுட் நடிகர் மாதிரி இருக்க வேண்டும் என்று சொன்னதாக நடிகை மீனா வெளிப்படையாக பேசி உள்ளார்.

தமிழ் சினிமாவில் 90-களில் ரசிர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் நடிகை மீனா. தமிழ் சினிமாவில் மட்டுமல்ல தென்னிந்திய சினிமாவையே ஒரு கலக்கு கலக்கியவர்.

சிவாஜி கணேசனின் நெஞ்சங்கள் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக மீனா அறிமுகமானார். பிறகு, அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தபோது, மீனா பிரபலமானார்.

Advertisment
Advertisements

மீனா வளர்ந்த பிறகு, நடிகர் ரஜினிகாந்த்துக்கே ஜோடியாக நடித்து பிரபலமானார். மீனா ரஜினியுடன் முத்து படத்தில் நடித்து தமிழகத்தில் மட்டுமல்ல, ஜப்பானிலும் ரசிகர்களைப் பெற்றார். ரஜினி, கமல், விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தார்.

நடிகை மீனா பெங்களூருவைச் சேர்ந்த வித்யாசாகர் என்பவரை 2009-ல் திருமணம் செய்துகொண்டார். இவர்களின் மகள் நைனிகா 5 வயதில் தெறி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து புகழ்பெற்றார்.

இப்படி மகிழ்ச்சியாகப் போய்க் கொண்டிருந்த மீனாவின் வாழ்க்கையில், இடி விழுந்தாற்போல, மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் தொற்று காரணமாக 2022-ல் காலமானார். அந்த துயரத்தில் இருந்து அவர் மெல்ல மீண்டு எழுந்து வருகிறார். நடிகை மீனா சமீபமாக ஊட்கங்களில் நேர்காணல் அளித்து வருகிறார்.

நடிகை மீனா பிரபல ஊடகம் ஒன்றுக்கு அளித்த மனம் திறந்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.

நடிகை மீனா பிரபல பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் மீது தனக்கு இருந்த அளவில்லாத ஆசையைக் கூறியிருக்கிறார். மீனாவை பேட்டி எடுத்தவர் ரித்திக் ரோஷன் புகைப்படத்தைக் காட்டிய உடனே உணர்ச்சிவசப்பட்ட மீனா ரித்திக் ரோஷனைப் பற்றி பேசத் தொடங்குகிறார்.

“எனக்கு அவரை ரொம்பப் பிடிக்கும். அந்த போட்டோ எடுத்தப்போ என் இதயமே நொறுங்கிடுச்சு. அவருக்கு அன்னக்கி கல்யாணம். எனக்கு அப்போ கல்யாணம் ஆகல. என் அம்மா கிட்ட கூட ரித்திக் ரோஷன் மாதிரி மாப்பிள்ளை பாருங்கம்மான்னு சொன்னேன்” என்று வெளிப்படையாகப் பேசி இருக்கிறார். நடிகை மீனா ரித்திக் ரோஷன் மாதிரி ஆளை திருமணம் செய்ய ஆசைப் பட்டதாகக் கூறிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”

Meena

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: