90ஸ் கிட்ஸ்களின் கனவு தேவதையாக வலம் வந்து பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் நடிகை மீனா. ரஜினிகாந்த், கமல்,சரத்குமார், விஜயகாந்த், அஜித், விஜய் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.
1981ம் ஆண்டு, துறுதுறுப்பான செய்கையாலும், அழகாலும் சிவாஜியின் கண்களை ஈர்த்தார் மீனா. இதையடுத்து, மேஜர் சுந்தர் ராஜன் இயக்கத்தில் உருவான நெஞ்சங்கள் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது அறிமுகத்தை கொடுத்தார்.
1984ம் ஆண்டு ஆகஸ்ட் 2 ந் தேதி வெளியானத் திரைப்படம் அன்புள்ள ரஜினிகாந்த். இத்திரைப்படத்தை, கே நட்ராஜ் இயக்கி இருப்பார். இப்படத்தில் அம்பிகா, ரஜினி, ஒய் ஜி மகேந்திரன், ராஜ்குமார் ஆகியோர் நடித்திருப்பார்கள்.
இத்திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த், ரஜினிகாந்த் ஆகவே நடித்திருப்பார். குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனாவின் கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது.
இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா இப்படத்தில் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். ரஜினி மீனாவுக்கு சாக்லெட் கொடுக்கும் காட்சியில், மீனா முகம் சுளித்துக்கொண்டு சாக்லெட்டை துப்பும் காட்சி இடம் பெற்று இருக்கும். இந்த காட்சி எனக்கு மிகவும் சவாலானதாக இருந்தது என்று மீனா கூறியுள்ளார்.
மேலும், ரஜினி ஆங்கிள் என்ற கூப்பிட்ட காட்சி எனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், அந்த தருணத்தை தற்போது நினைக்கும் போது கூட மிகவும் நெகிழ்ச்சியாக இருப்பதாகவும் மீனா கூறினார்.
அந்த திரைப்படம் வெளியானது என்னமோ இப்போதுதான் என்பது போல இருக்கிறது என்று மீனா கூறினார். அதில், ரோஸி கதாபாத்திரத்தை எனக்கு அளித்த இயக்குனருக்கும், படப்பிடிப்பில் எனக்கு பக்கபலமாக இருந்த ரஜினிகாந்த் அவர்களுக்கும் நன்றி என பகிர்ந்து இருந்தார்.
அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தை அடுத்து ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா. 1990ம் ஆண்டு புதிய கதை படத்தில் முதன்முறையாக ஹீரோயினாக அறிமுகமாகி கொடிகட்டி பறந்தார். மேலும், முத்து திரைப்படத்தில் ரஜினிகாந்த்துக்கு ஜோடியாகவும் நடித்தார்.
அது வரைக்கும் ரஜினி அங்கிள் என்று கூப்பிட்டு கொண்டிருந்த மீனா எஜமான் படத்தின் படப்பிடிப்பின் போது ரஜினியை அங்கிள் என்றும் அழைக்க முடியாமல், சார் என்றும் அழைக்க முடியாமல் மிகவும் கடினமாக இருந்தது என்று கூறினார்.
முதல் இரண்டு நாள் ஷூட்டிங்கின் போது மீனா ரஜினியை முகம் கொடுத்து கூட பார்க்க கஷ்ட்ட பட்டாராம். ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் பிஸியாக நடித்த இவர் பிஸியாக இருக்கும் போதே திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.
அட்லி மற்றும் விஜய் கூட்டணியில் உருவான தெறி திரைப்படத்தில், மீனாவின் மகள் நைனிகா நடித்திருந்தார்.