zee tv: உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படத்தின் மூலமாகத்தான் நான் ஸ்டேட் அவார்ட் வாங்கினேன்…அந்த வகையில் விக்கிரமன் சாருக்கு ரொம்ப ரொம்ப கடமைப்பட்டு உள்ளேன் என்று நடிகை ரோஜா கூறி இருக்கிறார். ஜீ தமிழ் டிவியின் ஸ்டார்ஸ் வித் வீக் எண்ட் என்கிற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ரோஜா இவ்வாறு கூறி இருக்கிறார். நடிகை சுகாசினி தொகுத்து வழங்கி வந்த இந்த நிகழ்ச்சியை ஜீ தமிழ் சானல் மறு ஒளிபரப்பு செய்து வருகிறது. அதில் ஒரு எபிசோடில் பங்கேற்றார் ரோஜா. அப்போது பேசிய ரோஜா, பெரிய பெரிய இயக்குநர்கள் படத்தில் நடித்த போதெல்லாம் கிடைக்காத விருது உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் படத்தில் நடித்து கிடைத்தது என்று கூறினார். அந்த நேரத்தில் அங்கு ரோஜாவுக்கு சர்பிரைஸ் தரும் விதத்தில் வந்து நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட விக்கிரமன், அந்த படத்தில் ரோஜா விருது வாங்கியதற்கு முழுக்க முழுக்க ரோஜாவின் டெடிகேஷன்தான் காரணம் என்று கூறினார்.
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் படத்துக்கு ஆர்ட்டிஸ்ட் தேடிக்கொண்டு இருந்தபோது, ரோஜா நடிப்பில் வெளி வந்த இறைவன் படம் பார்த்து, இந்த கேரக்டருக்கு இவங்கதான் என்று தயாரிப்பாளரிடம் சொன்னேன். அவர் கிளாமராக நடித்துக்கொண்டு இருக்கும் ரோஜாவுக்கு இது பொருந்துமா என்று மறுத்துவிட்டார். ஆனால், நான் பிடிவாதமாக ஹோம்லி லுக் ரோஜாவுக்கு நன்றாக இருக்கிறது என்று சொன்னேன். அப்படித்தான் ரோஜா இந்த படத்துக்குள் வந்தார். ஃபிளாஷ் பேக்கிலும் ரோஜாதான் அதிக காட்சிகளில் இருப்பார். அடுத்தும், இவர்தான் அதிக காட்சிகளில் இருப்பார். அப்போது கேரவன் எல்லாம் கிடையாது. கொளுத்தும் வெயிலில் ரோஜா முழு ஒத்துழைப்பு கொடுத்ததால் 46 நாட்களில் ஷூட்டிங் முடித்தோம். ரோஜாவால் படப்பிடிப்பு தாமதமானது என்று இல்லை என்று கூறினார்.
ஒரே பாராட்டு தான் போங்க!????#Throwback #ZeeTamil pic.twitter.com/Sqs2lfVn3F
— Zee Tamil (@ZeeTamil) May 31, 2020
வானத்தை போல படத்திலும் நான் ரோஜாவைத்தான் நடிக்க வைப்பதாக, அந்த கதையை ரோஜாவை மனதில் வைத்து எழுதினேன். ஆனால், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் பாணி மாதிரி இருக்கும்.. வேண்டாம் என்று தயாரிப்பாளர் சொன்னதால் மீனாவை நடிக்க வைத்தோம் என்று கூறினார். (அப்போது மீனாவும், ரோஜாவும் கொடிக்கட்டிப் பறந்த காலம்…இருவரும் கிளாமர் கேரக்டரில் நடித்து உச்சத்தில் இருந்தனர்.)ரோஜாவும், செல்வமணியும் மனமொத்த தம்பதியர்.. குடும்பத்தை ரொம்ப நேசிப்பவர் செல்வமணி. என்ன பார்ட்டி , டிஸ்கஷனில் இருந்தாலும், மனைவி குழந்தைகளிடம் போனில் பேசாமல் இருக்க மாட்டார் என்று ரோஜாவை மிகவும் பாராட்டி பேசினார் விக்கிரமன்.