Advertisment

50-ஐ கடந்த அழகு தேவதை; சூப்பர் ஸ்டாருக்கு பிடித்த நடிகை: இந்த குட்டி பாப்பா யாருன்னு சட்டுன்னு சொல்லுங்க!

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் முதல் படத்தில் நடித்த புகைப்படங்களை பகிர்ந்த பிரபல நடிகை; வைரல் போட்டோஸ்

author-image
WebDesk
Aug 10, 2023 22:39 IST
New Update
Meena child photo

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் முதல் படத்தில் நடித்த புகைப்படங்களை பகிர்ந்த பிரபல நடிகை

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உயர்ந்த மீனா, குழந்தையாக நடித்தப்போது எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து, ரஜினிகாந்த் உடனான முதல் படத்தை நினைவுப்படுத்தியுள்ளார்.

Advertisment

அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் சூப்பர் ஸ்டாரை ’ரஜினி அங்கிள் நீங்க எங்க இருக்கீங்க’ என்று அழைத்தவர் குழந்தையாக நடித்த நடிகை மீனா. ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அவர் அதற்கு முன்னரே ஒரு படத்தில் நடித்துள்ளார் என்பது பலருக்கும் தெரியாதது.

publive-image

இதையும் படியுங்கள்: கெத்தாக சினிமா உலகை கட்டி ஆண்ட பானுமதி : ஒரு பாடலுக்காக இசை அமைப்பாளருடன் நடந்த மோதல்

ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், ரஜினியுடன் தான் நடித்த முதல் படத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் நடிகை மீனா.  ரஜினிகாந்த், அம்பிகா, ராதா உள்ளிட்ட பலர் நடித்து, எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 1982-ல் வெளிவந்த 'எங்கேயோ கேட்ட குரல்'. படம் தான் ரஜினியுடன் மீனா நடித்த முதல் படம்.

publive-image

இதுதொடர்பாக மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ”காப்பகத்தில் இருந்து... எங்கேயோ கேட்ட குரல் @ரஜினிகாந்துடன் எனது முதல் படம் #spmuthuramansir @starambika @radha3915. நான் நெஞ்சங்கள் படத்தில்  அறிமுகமானாலும், முதலில் வெளியான படம் இதுதான்" என்று பதிவிட்டுள்ளார்.

பின்னர் மீனா பெரிய நடிகையாகி, ரஜினிக்கு ஜோடியாக வீரா, முத்து, எஜமான் உள்ளிட்டப் படங்களில் நடித்தார். ரஜினி மட்டுமல்லாது, கமல், பிரபு, சத்யராஜ், அஜித், கார்த்திக் என அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்தார். ரஜினிகாந்த் உடன் மீனா கடைசியாக 'அண்ணாத்தே' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Tamil Cinema #Rajinikanth #Meena
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment