/indian-express-tamil/media/media_files/2025/08/14/meena-vijay-2025-08-14-12-32-28.jpg)
நடிகை மீனா மகள் நைனிகா நடிகர் விஜய்யுடன் நடித்த 'தெறி' திரைப்படம், ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த ஒரு படம். 2016-ஆம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் வெளியான இந்தப் படம், விஜய்யின் நடிப்பிலும், நைனிகாவின் துறுதுறு நடிப்பிலும் பெரும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் நடந்த சில சுவாரஸ்யமான அனுபவங்களை மீனா பிஹைன்வுட்ஸ் ஹிட்ஸ் நேர்க்காணலில் பகிர்ந்து கொண்டார்.
நடிகை மீனா தனது மகள் நைனிகாவுக்கு நடிப்பைக் கற்றுக்கொடுத்த அனுபவம் மிகவும் சுவாரஸ்யமானது. ஒரு காட்சியில் எப்படி நடிக்க வேண்டும் என்று மீனா சொல்லிக்கொடுக்கும்போதெல்லாம், "உங்களை மாதிரியே செய்ய நான் என்ன பண்ணனும்? அதுக்கு நீங்களே போய் நடிச்சுட்டு வாங்க" என்று நைனிகா குறும்புத்தனமாகச் சண்டையிடுவாராம். தெறி படம், ஒரு குடும்பப் பாசத்தையும், வீரத்தையும் ஒருங்கே வெளிப்படுத்திய ஒரு வெற்றிகரமான திரைப்படம். இதில், நடிகர் விஜய் மற்றும் குழந்தை நட்சத்திரமான நைனிகாவின் பிணைப்பு, ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
அதேபோல'தெறி' படத்தில் விஜய், நைனிகாவை பைக்கில் வைத்து அழைத்துச் செல்லும் காட்சி ஒன்று உள்ளது. படப்பிடிப்புக்கு முன், நடிகர் விஜய்யைப் பார்த்து, "உங்களுக்கு வண்டி ஓட்டத் தெரியுமா?" என்று நைனிகா வெள்ளந்தியாகக் கேட்டிருக்கிறார். அதற்கு விஜய், சிரித்துக்கொண்டே பைக் ஓட்டிக்காட்டி, "இப்போது நாம் செல்லலாமா?" என்று நைனிகாவிடம் கேட்டுவிட்டுத்தான் அவரை பைக்கில் அழைத்துச் செல்வாராம். மீனா அப்படியெல்லாம் கேட்க கூடாது என்று நைனிகாவிடம் கேட்டாலும் அவர் இல்லை எனக்கு தெரிய வேண்டும் என்று கூறுவாராம்.
"Vijay என்னை Interview பண்ணாரு"😮 - Meena"Vijay என்னை Interview பண்ணாரு"😮 - Meena #vijay #thalapathy #HBD #HBDVijay #vijay50 #tvk #BTS #happybirthday
Posted by Behindwoods on Thursday, June 20, 2024
நடிகர் விஜய்க்கு மீனாவின் நடிப்பு மீது எப்போதும் ஒரு மரியாதை உண்டு. விஜய்யுடன் இணைந்து நடிப்பதை மீனாவும் விரும்பியிருக்கிறார். ஆனால், அந்த நேரத்தில் பல்வேறு திரைப்படங்களில் ஒப்பந்தமாகி இருந்ததால், அவருடன் படத்தில் ஒரு முழுமையான கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை மீனா தவறவிட்டாராம். ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்த "சரக்கு வச்சிருக்கேன், இறக்கி வச்சிருக்கேன்" என்ற பாடலுக்கு நடனமாட வேண்டும் என படக்குழுவினர் மிகவும் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டதால், அந்த ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட அவர் சம்மதித்ததாக மீனா தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.