சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தில் இணைந்துள்ள நடிகை மீனா ‘ஸ்டைலிஷ் தமிழச்சி’ பாடலுக்கு கேட் வாக் போட்டு ரீல் செய்து அசத்தியுள்ளார். மீனாவின் ஸ்டைலிஷ் இன்றைய முன்னணி யூத்துகளுக்கே டஃப் ஃபைட் கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது.
1990களில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் நடிகை மீனா. இவர் தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னாளில் ரஜினிகாந்த் படத்தில் அவருக்கே ஜோடியாக நடித்தார்.
தமிழ் சினிமா உலகில் 1990களில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை மீனா, வீரா, முத்து, நாட்டாமை, அவ்வை ஷன்முகி, தெனாலி, என் ராசாவின் மனிசிலே, பெரியண்ணா உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் சரத்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
நடிகை மீனா தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னட சினிமாக்களிலும் நடித்துள்ளார். பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், திருமணம் செய்துகொண்டு பெங்களூருவில் வசித்து வருகிறார். அவருக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். மீனாவின் மகள் நடிகர் விஜயின் தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.
நடிகை மீனா திருமணத்துக்குப் பிறகு, நல்ல கதாபாத்திரம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் மோகன்லால் உடன் நடித்த த்ரிஷ்யம் 2 படம் பெரிய வெற்றிபெற்றுள்ளது. இதனிடையே, மீனா, சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தில் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
தனது தோற்றத்தை பராமரிப்பதில் மீனா தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார். சினிமாவில் நடிப்பதோடு மட்டுமல்லாமல், மீனா சமூக ஊடகங்களிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார். நடிகை மீனா, அண்மையில், ஸ்டைலிஷ் தமிழச்சி என்ற பாடலுக்கு கேட் வாக் செய்து ரீல் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் நடிகை மீனா பிங்க் உடையில், பளீச் தோற்றத்தில் ஸ்டைலாக கேட் வாக் செய்து நடந்து வர ஸ்டைலிஷ் தமிழச்சி பாடல் பின்னணியில் ஒலிக்கிறது. அதில் மீனா ஸ்டைலாக சுற்றி திரும்பும்போது சூப்பர் ஸ்டார் ரஜினி படத்தின் ஹீரோயின் என்பதை நினைவுபடுத்தும் விதமாக உள்ளது. 40-களில் உள்ள மீனா ஸ்டைலிஷ் தமிழச்சி வீடியோவில் செம ஸ்டைலாக ரீல் செய்துள்ளார்.
மீனாவின் ஸ்டைலிஷான இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் இன்றைய யூத்களுக்கே டஃப் ஃபைட் கொடுக்கிறாங்களே என்று கம்மெண்ட் செய்து வருகின்றனர். நடிகை மீனாவின் இன்ஸ்டாகிராம் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“