/tamil-ie/media/media_files/uploads/2020/10/maghana-raj.jpg)
சில மாதங்களுக்கு முன்பு மறைந்த கன்னட நடிகர் சீரஞ்சீவி சார்ஜாவின் மனைவி நடிகை மேகனா ராஜ், தனது கணவர் இறக்கும்போது கர்ப்பமாக இருந்த நிலையில், அவர் இன்று பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தையை பிரசவித்துள்ளார்.
நடிகர் அர்ஜூனின் உறவினரும் கன்னட சினிமா நடிகருமான சிரஞ்சீவி சார்ஜா நடிகை மேகனா ராஜுவை 2018ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். மேகனா ராஜ், தமிழ், கன்னடம், மலையாள சினிமாக்களில் நடித்துள்ளார். இருவரும் பெங்களூருவில் வசித்து வந்த நிலையில் சிரஞ்சீவி சார்ஜா கடந்த ஜூன் மாதம் மாரடைப்பால் காலமானார். 39 வயதான சிரஞ்சீவி சார்ஜாவின் மறைவு கன்னட சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் இறக்கும்போது, அவருடைய மனைவி மேகனா ராஜ் கர்ப்பமாக இருந்தார்.
இந்த நிலையில், நடிகை மேகனா ராஜ் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இன்று ஆண் குழந்தையை பிரசவித்தார். இதனை, சிரஞ்சீவி சார்ஜாவின் சகோதரரும் மேகனா ராஜுவின் மைத்துனருமான துருவ சார்ஜா இன்ஸ்டாகிராமில் தெரித்துள்ளார்.
துர்வ சார்ஜா தனது சகோதரர் சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவி மேகனா ராஜுவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதை இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். அதில், “ஆண் குழந்தை, ஜெய் ஹனுமான்” என்று தெரிவித்துள்ளார்.
சிரஞ்சீவி சார்ஜா இருந்திருந்தால், அக்டோபர் 18ம் தேதி மேலும் ஒரு வயதை எட்டியிருப்பார் என்று தனது சகோதரியின் மகனை நினைவு கூர்ந்த மூத்த நடிகர் அர்ஜுன் சர்ஜா, “ஜூனியர் சிரஞ்சீவியை” வரவேற்க குடும்பம் தயாராகி வருவதாகக் கூறினார். அப்போது அவர், இதுவும் கடந்து போகும், நாம் வாழ்க்கையில் முன்னேற வேண்டும். விஷயங்களை மறப்பதற்கு பதிலாக, நாங்கள் பலமாக இருக்க முயற்சித்தோம். உங்களுக்கும் குழந்தைக்கும் உறுதியாக நாங்கள் இருப்போம் என்று அவரிடம் சொல்ல விரும்புகிறேன். எங்கள் ‘ஜூனியர் சிரு’வை புன்னகையுடனும் மகிழ்ச்சியுடனும் வரவேற்பதன் மூலம் அனைத்து எதிர்மறைகளையும் நேர்மறையாக மாற்றுவதே இந்த சிறிய சந்திப்பு” என்று மேகனாவின் இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிடப்பட்ட வீடியோவில் அர்ஜுன் கூறினார்.
இந்த வார தொடக்கத்தில், துருவ சார்ஜா புதிதாகப் பிறந்த குழந்தைக்கு பரிசளிக்க ரூ.10 லட்சம் மதிப்புள்ள வெள்ளி தொட்டிலை வாங்கியிருந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.