/indian-express-tamil/media/media_files/2025/09/12/mohini-2025-09-12-10-50-27.jpg)
நடிகர் விவேக் திருமணம் செய்ய விரும்பி என்னிடம் இப்படி கேட்டார்... 90'ஸ் ஹீரோயின் ஃப்ளாஷ்பேக்!
1990-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மோகினி. ‘ஈரமான ரோஜாவே’ படத்தில் ’வா வா அன்பே பூஜை உண்டு’ பாடலையும் சரி அதில் நடித்த மோகினியையும் சரி யாராலும் மறந்துவிட முடியாது. நடிகை மோனியின் கண்களுக்காகவே அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர்.
இதையடுத்து பரத் என்பவரை திருமணம் செய்து கொண்ட மோகினி அமெரிக்காவில் குடியேறினார். இதனால் சினிமாவில் இருந்து அவர் இடைவெளி எடுத்துக் கொண்டார். இந்நிலையில், நடிகை மோகினி நடிகர் விவேக் தன்னை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்ததாக பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது, “ஊர்வசி அக்கா சாதாரணமா இருப்பாங்க. கேமரானு வந்துட்டா புலி மாதிரி நடிப்பாங்க. அவங்க கூட நானும், குஷ்புவும் நடிக்கும் போது நாங்களே முடிவு பண்ணிப்போம். ஊர்வசி நடிக்கும் போது நம்மள யாருமே பாக்கபோறது இல்ல. அப்பறம் ஏன் நம்ம கஷ்டப்பட்டு நடிக்கிறோம் என்று. நான் படப்பிடிப்பு தளத்தில் ரொம்ப அமைதியாக தான் இருப்பேன்.
குஷ்பு மூலம் தான் நான் ‘வனஜா கிரிஜா’ படப்பிடிப்பு தளத்தில் எலோரிடமும் பேச ஆரம்பித்தேன். ராம்கீயோட பெரிய ரசிகை நான். ஸ்ரீவித்யாவிடம் நான் சொல்லிக்கொண்டே இருப்பேன். நடிகர் ராம்கீயை பார்ப்பதற்கு என்னை கூட்டிட்டு போங்கனு. ’வனஜா கிரிஜா’ படத்தில் ஒரு மோட்டர் பைக் சீன் இருந்தது. அதில் நானும், குஷ்பும் சென்றதில் நான் கீழே விழுந்து தலையில் அடிப்பட்டு மருத்துவமனையில் இருந்தேன்.
விவேக் அவருக்கு திருமணம் ஆகும் முன்பிருந்தே என்னுடன் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு நாள் கேட்டார் நாம் திருமணம் செய்துக் கொள்ளலாமா என்று. நான் இதைக் கேட்டு பயங்கரமா நான் சிரிச்சிட்டேன். அதன்பின் தினமும் அதை சொல்லி என்னை கிண்டல் செய்வார். படப்பிடிப்பு தளத்தில் நாங்கள் இரண்டு பேரும் பல பாடல்களை பாடிக் கொண்டிருப்போம்.
‘சின்ன மருமகள்’ திரைப்படத்தின் போது சிங்கத்தின் குகைக்குள் சிங்கிளாக மாட்டிக் கொண்டது போல் இருந்தது. படம் ஆரம்பிப்பதற்கு முன்பே என்னை எல்லாரும் பயமுறுத்திட்டாங்க. சிவாஜி இப்படி தான் இருப்பாரு என்று. முதல் நாள் படப்பிடிப்பின் போது 9 மணி படப்பிடிப்பிற்கு 8:50 மணிக்கு சென்றேன். அங்கு பார்த்தால் சிவாஜி சார் நாற்காலியில் உட்கார்ந்திருந்தார்.
எனக்கு முதல் ஷார் சிவாஜி சாருடன் தான் இருந்தது. அடுத்த ஷாட் வடிவுகரசி அம்மாவுடன் சண்டை போடும் காட்சி. புடவை கட்டும் போது இப்படி தான் இருக்கனும் என்று நிறைய வடிவுக்கரசி அம்மா சொல்லிக் கொடுப்பாங்க. மீனை தூக்கிப்போடும் காட்சியில் எனக்கு அழுகையை வந்துவிட்டது. நான் மீனலாம் தொட மாட்டேன் என்னை விட்டுருங்கனு அழுதேன்.
எனது முதல் மகன் அமெரிக்காவில் வேலை செய்கிறான். எனது இரண்டாவது மகனுக்கு நான் தான் ஆசிரியர். அவனுக்கு ஹோம் டியூசன் எடுத்துட்டு இருக்கிறேன். கடவுள் எனது வாழ்க்கையில் கொண்டு வந்த நபர் எனது கணவர் பரத். அவர் வந்த பின்பு தான் நான் எல்லோரிடமும் இவ்வளவு சகஜமாக பேச ஆரம்பித்தேன்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.