மெக்காவுக்கு புனித ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ள மும்தாஜ் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “இறைவன் அருளால் இரண்டாவது முறையாக மெக்கா வந்துள்ளேன். என்னைப் பற்றி இந்த உலகம் என்ன பேசினாலும், நான் தற்போது புதிதாக பிறந்த குழந்தையாக உணர்கிறேன். நீங்கள் மெக்கா, மெதினாவை பாருங்கள். இந்த உலகை நினைத்து கவலைக்கொள்ளாமல் அல்லாவை நினைத்து வழிபடுங்கள். எனது பாவம் செய்த கண்கள் மெக்காவை பார்த்துவிட்டன. ஆடிய கால்கள் காபாவில் நடந்துவிட்டன. என்னால் இதை செய்ய முடியும்போது உங்களாலும் இதனை செய்ய முடியும்.
நல்ல வாழ்க்கையை வாழ இறைவனை வேண்டுங்கள். அல்லா உங்களுக்கு என்றென்றும் உறுதுணையாக இருப்பார். யாருக்காகவும், எந்த நிலையிலும் மன உறுதியை விட்டுவிடாதீர்கள்” எனக் கூறியுள்ளார்.
நடிகை மும்தாஜ் விஜய் ஜோதிகா நடிப்பில் எஸ்.கே. சூர்யா இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற குஷி படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார்.
இந்தப் படத்தில் தேவா இசையில் கட்டிப்பிடி கட்டிப்பிடிடா என்ற பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது. மும்தாஜ்-ஐ பட்டித்தொட்டியெங்கும் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“