நிறைமாத கர்ப்பினியாக இருக்கும் நடிகை மைனா நந்தினி வளைகாப்புக்குப் பிறகு, மேக்கப் உடன் க்யூட்டாக டான்ஸ் ஆடிய வீடியோ சமூக ஊட்கங்களில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் அறிமுகமானவர் நடிகை நந்தினி. அந்த சீரியலில் நந்தினி மைனா என்ற அழகான குறும்புப் பெண் கதாபாத்திரத்தில் நடித்து தொலைக்காட்சி பார்வையாளர்களைக் கவர்ந்தவர். அதற்குப் பிறகு, ரசிகர்கள் அவரை மைனா நந்தினி என்றே அழைக்கத் தொடங்கினார்கள். பின்னர், அவர் பெயரே மைனா நந்தினி ஆகிவிட்டது.
மைனா நந்தினியின் நடிப்புத் திறமையைப் பார்த்து வெள்ளித்திரையும் வாய்ப்புகளை வழங்கியதன் மூலம், அவர் வம்சம், ராஜா ராணி, தர்ம பிரபு ஆகிய படங்களில் நடித்து கவனம் பெற்றார். இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நம்ம வீட்டுப் பிள்ளை படத்திலும் நடித்துள்ளார்.
சினிமா, சின்னத்திரை என நடித்து வந்த மைனா நந்தினி கார்த்திகேயன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால், இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்தார். அப்போது, அவருடைய கணவர் கார்த்திகேயன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
அதன் பிறகும் மைனா நந்தினி 2019 நவம்பர் மாதம் சீர்யல் நடிகர் யோகேஸ்வரனை காதலித்து 2வது திருமணம் செய்துகொண்டார். தற்போது நிறைமாத கர்ப்பினியாக உள்ள மைனா நந்தினிக்கும் ஆகஸ்ட் 24-ம் தேதி வளைகாப்பு நடைபெற்றுள்ளது. நடிகை மைனா நந்தினி வளைகாப்பு நிகழ்ச்சியின் போது தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படங்கள் குறித்து நந்தினி, “குட்டி யோகேஷ் அல்லது குட்டி நந்தினிக்காக காத்திருப்பதாகவும் லவ் யு பாப்பா என்றும் குறிப்பிட்டிருந்தார். நந்தினியின் வளைகாப்பு புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், நந்தினிகும் வாழ்த்துகள் கூறி மகிழ்ச்சி தெரிவித்தனர்.
மேலும், நந்தினி வளைகாப்பு முடிந்த பிறகு, அதே காஸ்ட்யூமில், சூரியாவின் சூரரைப் போற்று படத்தில் இடம்பெற்றுள்ள காட்டுப் பயலே பாடலுக்கு ரொம்பவும் அலட்டிக்கொள்ளாமல் அழகாக ஒரு க்யூட் டான்ஸ் ஆடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
மைனா நந்தினி வளைகாப்புக்குப் பிறகு, க்யூட் டான்ஸ் ஆடிய வீடியோ சமூக ஊடகங்களில் நெட்டிசன்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"