இவர் தான் மைனா அப்பாவா? வயசானாலும் பார்க்க செம ஸ்டைலா இருக்காரே?

நந்தினியின் அப்பா ராஜேந்திரன். அவருக்கென இன்ஸ்டாவில் தனி கணக்கை வைத்துள்ளார். அதில் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ்களை பதிவிட்டு வருகிறார்.

Actress myna nandhini father
Actress myna nandhini father looks so stylist at old age

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்து பிரபலமான ‘மைனா’ நந்தினி. தற்போது சீரியல், படங்கள், ரியாலிட்டி ஷோ என பிஸியாக இருக்கிறார்.

மதுரையைச் சேர்ந்த நந்தினி அங்குள்ள லோக்கல் சேனலில், தொகுப்பாளராக தனது மீடியா பணியை தொடங்கினார். அதில் நல்ல பெயர் கிடைத்ததால், சினிமா மற்றும் விளம்பர வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தன. ஆனால் அவருக்கு புகழைத் தேடிக் கொடுத்தது, விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணண் மீனாட்சி சீரியல் தான். அதில் ஹீரோயின் தோழியாக மைனா கேரக்டரில் மதுரை பாஷை பேசி நடித்தது, நந்தினிக்கு நிறைய ரசிகர்களை தேடிக் கொடுத்தது.

பின்னர் தனிப்பட்ட வாழ்க்கையில் நிறைய வலி, பின்னடைவுகளை சந்தித்தாலும் அதிலிருந்து மீண்டு தனது அடுத்த இன்னிங்சை தொடங்கினார் நந்தினி.

நந்தினிக்கும், சீரியல் நடிகர் யோகேஷ்வரனுக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு  திருமணம் நடந்தது. இவர்களுக்கு துருவன் என்ற மகன் இருக்கிறான்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நந்தினி, அதில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள், ரீல்ஸ்களை வெளியிட்டு வருகிறார். இன்ஸ்டாகிராமில் மட்டும் 40 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் நந்தினியை பின் தொடர்கின்றனர்.

சமீபத்தில் நந்தினியின் இன்ஸ்டா ரீல் ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகியது. அதில் நந்தினி, அவரது அப்பாவுடன் சேர்ந்து ஒரு மியூசிக் பீட்டுக்கு ஆடினார். அப்போது தான் நந்தினியின் அப்பா இவ்வளவு ஸ்டைலானவரா என்பது அனைவருக்கும் தெரியவந்தது.

நந்தினியின் அப்பா ராஜேந்திரன். அவருக்கென இன்ஸ்டாவில் தனி கணக்கை வைத்துள்ளார். அதில் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ்களை பதிவிட்டு வருகிறார். குறிப்பாக இவர் ரீல்ஸ்களை பார்க்கும் போது ராஜேந்திரன் ஒரு ரஜினியின் தீவிர  ரசிகர் என்பது தெளிவாக தெரிகிறது. ரஜினியை போல் உடையணிந்து, ஹேர் ஸ்டைல் எல்லாம் வைத்து, ரஜினியின் வசனங்களுக்கு இவர் ரீல்ஸ் செய்வதை பார்க்கும் போது, ராஜேந்திரனுக்குள்ளும் ஒரு நல்ல கலைஞன் மறைந்து கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது.

மேலும் ராஜேந்திரன் தனது மனைவி, பேரன் துருவன், மகள் மைனா என அனைவருடன் எடுத்த புகைப்படங்களையும் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.  

அவரது இன்ஸ்டா ரீல்ஸ்களை பார்த்த பலரும், பரவாயில்லையே! நந்தினியின் அப்பா இந்த வயதிலும் இவ்வளவு ஸ்டைலாக இருக்கிறாரே என புகழ்ந்து வருகின்றனர். மேலும் நந்தினியிடம் உங்களை மாதிரியே உங்கள் அப்பாவையும் நல்ல நடிகராக்கி விடுங்கள் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

தற்போது மைனா’ லோகேஷ் கனகராஜ் இயக்கி, கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிக்கும் விக்ரம் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Actress myna nandhini father looks so stylist at old age

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com