Advertisment

நடிகை நதியா மகள்களா இவங்க? இணையத்தில் வைரலாகும் ஃபேமிலி போட்டோஸ்

ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் அழகு; வைரலாகும் நடிகை நதியா மகள்களின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

author-image
WebDesk
New Update
Nadhiya Family

ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் அழகு; வைரலாகும் நடிகை நதியா மகள்களின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சினிமா ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் விதத்தில், நடிகை நதியா மகள்களின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறார்.

Advertisment

தமிழ் சினிமாவில் 90களில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்தவர் நடிகை நதியா. மலையாளப் படங்களில் நடித்து வந்த நதியா, 1985 ஆம் ஆண்டு வெளியான பூவே பூச்சூடவா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

தொடர்ந்து ரஜினிகாந்த், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் உள்ளிட்ட டாப் நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றார். மலையாளத்தில் அறிமுகமாகியிருந்தாலும் நதியா தமிழில் தான் அதிகமான படங்களில் நடித்துள்ளார். வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்கும் நதியா, குணச்சித்திர நடிகையாக மக்களின் மனதை கொள்ளையடித்தார். இவரது நடிப்பை தாண்டி நதியாவின் டிரெஸ்ஸிங் சென்ஸ், மேக்கப், ஹேர் ஸ்டைல் ​​போன்றவற்றிற்காக இவருக்கு பெண் ரசிகைகளும் அதிகமாக இருந்தனர்.

தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த நதியா, கடந்த 1988ஆம் ஆண்டு சிரீஸ் காட்போல் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் இந்த காதல் ஜோடிக்கு சனம், ஜனா என இரண்டு மகள்கள் உள்ளனர். திருமணம் முடிந்த கையோடு அமெரிக்காவில் செட்டிலான நதியா, நடிப்புக்கு பிரேக் கொடுத்துவிட்டார்.

நீண்ட நாட்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்த நதியா, 2004 ஆம் ஆண்டு வெளியான எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி என்ற படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாக நடித்தார். தொடர்ந்து நதியா குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் கலக்கி வருகிறார். ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்தாலும் நதியா தற்போது வரை இளமையாகவே இருந்து வருகிறார்.

திரைப்படங்களை தொடர்ந்து சமூக ஊடகங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் நதியா தனது கணவர், மகள்களுடன் இருக்கும் புகைப்படங்களை ஷேர் செய்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார். லேட்டஸ்ட்டாக நதியா குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள், இரண்டு மகள்களுமே, அழகில் அம்மாவையே மிஞ்சும் விதத்திலும், ஹீரோயின் லுக்கிலும் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment