Advertisment
Presenting Partner
Desktop GIF

'அந்த காதல் கடிதங்களை இப்போதும் வைத்திருக்கிறேன்' நடிகை நளினி ஃப்ளாஷ்பேக்

நடிகர் ராமராஜன் தனக்கு கொடுத்த காதல் கடிதத்தை தற்போதுவரை பாதுகாத்து வைத்திருப்பதாக நடிகை நளினி தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நடிகை நளினி ஃப்ளாஷ்பேக்

நடிகை நளினி ஃப்ளாஷ்பேக்

நடிகர் ராமராஜன் தனக்கு கொடுத்த காதல் கடிதத்தை தற்போதுவரை பாதுகாத்து வைத்திருப்பதாக நடிகை நளினி தெரிவித்துள்ளார்.

Advertisment

யூடியூப் சேனலுக்கு நடிகை நளினி கொடுத்த பேட்டியிலிருந்து ”வாழை அடி வாழை’ படத்தின்போது கற்பகம் ஸ்டுடியோவுக்கு எனது உறவினர்கள் வந்ததால், அப்பா என்னை படபிடிப்பை பார்க்க அனுமதித்தார். அப்போது சினிமா இப்படி பிரம்மாண்டமாக இருக்கிறது என்று வியந்திருக்கிறேன். நான் சினிமாவில் நடிப்பதில் அப்பாவிற்கு விருப்பம் இருந்ததில்லை. சினிமாவைப் பற்றி தெரிந்திருந்ததால், அப்பா வேண்டாம் என்று நினைத்திருக்கலாம். நான் அவரின் செல்லப் பிள்ளை என்பதால் நான் கஷ்டப்பட வேண்டாம் என்று அவர் நினைத்தார். சிறு வயதில் சினிமா என்றாலே பெரும் பயம் இருந்தது. அதை பற்றி வீட்டில் யாரும் பேசமாட்டார்கள். படத்தைக்கூட வீட்டில் போட்டு காண்பிக்கமாட்டார்கள்.

எனது அம்மா ஒரு நடனக் கலைஞர் அவருக்கு நான் கதாநாயகி ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அப்பாவிற்கு அதில் விருப்பம் இல்லை. கோவித்துக்கொண்டு வீட்டை விட்டே சென்றுவிட்டார். மூத்த அண்ணாவும் இதனால் கோவித்துக்கொண்டு சென்றுவிட்டார். ஆனால் எனது அம்மா உறுதியாக இருந்து என்னை சினிமாவில் நடிக்க வைத்தார். பால நீலகண்டன் சாரின் ‘ குமரிக் கண்டம்’ படத்தில் நடித்தேன். கொட்டரக்கர சாரின் தனிமரம் திரைப்படத்தில் சுரளி ராஜனுக்கு மகளாக நடித்திருக்கிறேன். அதன் பிறகு தோடி ராகம், கள் வடியும் பூக்கள், ராணுவ வீரன் ஆகிய படங்களில் நடித்தேன்.

ரஜினி சாரோடு நடிக்கும்போது மிகவும் பயந்தேன். அம்மாவின் பின்னால் பயந்து ஒலிந்து கொள்வேன். மிகவும் பிரம்மாண்டமான ஸ்டாருடன் நடிக்கப்போகிறேன் என்ற பயம் இருந்தது. அப்போது ஸ்ரீதேவி பெரியார் ரோட்டில்தான் இருந்தார்கள். அவர்கள் அப்பாவுடன் நாங்கள் அனைவரும் சென்று பால் வாங்கிக்கொண்டு வருவோம். அதனால் எங்களுக்குள் நல்ல உறவு இருந்தது.

இடவெல்லா என்ற மலையாள படத்தில் நடித்தேன். அது மிகவும் வெற்றிகரமாக ஓடியது. தொடர்ந்து ஜார்ஜ் சாரின் படத்தில் வேலை செய்தேன். அப்போது லட்சுமி அம்மா என்னை பற்றி , டி.ராஜேந்தரிடம் சொன்னதால், என்னை படத்தில் தேர்வு செய்ததாக சொன்னார்கள். ஜார்ஜ் சாரோடு பேசி, டி.ராஜேந்தர் சார் அவரது படத்தில் நடிக்க வைத்தார்.

திரைப்படத்தின் மீது அதீத காதல் கொண்டவர் டி.ராஜேந்தர். ஒரு சீனில் நன்றாக நடித்தால் கைத் தட்டி நம்மை உற்சாகப்படுத்துவார். நம்மில் இருந்து ஒரு உத்வேகம் நம்மை அறியாமலே ஏற்படும். நளினியாக என்னை வெளியே தெரியப்படுத்தியவர் அவர்தான். எல்லா சீனையும் நடித்துகாட்டுவார். கீழே விழ வேண்டும் என்றால் விழுவார். அழுவார் இப்படி எல்லாவற்றையும் நமக்கு நடித்து சொல்லிக்கொடுப்பார்.

’உயிருள்ளவரை உஷா’ திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் அளவுக்கு அப்போது வயது இல்லை. இப்போது அனைவரும் 20 வயதுக்கு மேல்தான் நடிக்க வருகிறார்கள். ஆனால் அப்போது அப்படியில்லை. அந்த படம் வெற்றிபெற்ற பின்னர். ஒரு பஸ் முழுவதும் ரசிகர்கள் என்னை பார்க்க வந்தார்கள். அதை பார்த்து பயமாகத்தான் இருந்தது. அப்போது நடித்ததை இப்போது நினைத்தால் வெட்கமாக வருகிறது. இன்னும் நன்றாக நடித்திருக்கலாம் என்று தோன்றும்.

எல்லா இயக்குநர்களும் வித்தியாசமானவர்கள், டி.ராஜேந்தர் சார் பேசிக்கொண்டே இருப்பார். மணிவண்ணன் சார் பேசுவது நமக்கு சரியாக கேட்காது, மிகவும் மெதுவாகச் சொல்வார். கலைமணி சாரின் வசனங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறான திறமைகள் கொண்டவர்கள்.

நூலறுந்த பட்டம் படத்தில் நடிகர்களை தேர்வு செய்யும்போது என்னை வேண்டாம் என்று நிராகரித்தார்கள். ஆனால் ‘இந்த பொண்ணு’ நல்லா வரும் என்று அப்போது அவர்களிடம் விஜயகாந்த் சொல்லியிருக்கிறார். அவருடன் ஒரு சகோதர பந்தம் இருந்தது. படத்தின் நடிப்பதற்கான தேதிகளை அம்மாவுடன் அவர் எளிதாக பேசி வாங்கிவிடுவார். அப்படி ஒரு நெருக்காமான உறவு இருந்தது.

தேயிலை தோட்டத்தில் நடிக்கும் சீனில் நான் மிகவும் பயப்படுவேன். அப்போது அம்ரிஷ் அண்ணாதான் எனக்கு துணையாக இருப்பார். என்னை பத்திரமாக அரவணைத்து பார்த்துக்கொள்வார். எனக்கு இருட்டு என்றால் பயம் என்று அவருக்கு தெரியும்.

விஜயகாந்த் அண்ணா காதல் காட்சியில் நடிக்கும்போது, அண்ணா என்று சொல்ல வேண்டாம் என்று சொல்வார். அப்படி சொன்னால் நடிக்க வராது என்று பேசுவார். எனக்கும் எனது கணவருக்கும் பிரிவு ஏற்படும் நேரத்தில், எனது வீட்டுற்கு வந்த முதல் நபர் விஜயகாந்த் அண்ணாதான், என்ன இருந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்று கூறினார். மீண்டும் நடிக்க வருவதாக இருந்தால், அதற்கு துணையாக இருப்பேன் என்று எனக்கு பலம் கொடுத்தவர்.

சிவாஜி அப்பாவுடன் நடிக்கும்போது பயப்படக் கூடாது என்று அம்மா சொல்வார். நான் ஒவ்வொரு சீனில் நடித்து முடித்தவுடன் என்னை அவர் பாராட்டுவார். அவருடன் நடிக்கும்போது ஒரு சீனில் நான் நடந்து வந்து அழ வேண்டும், அவரின் நடிப்பைப் பார்த்து எனக்கு அழுகை வந்தது. க்ளிசரின் கூட தேவைப்படவில்லை. அவருடன் நடித்தது எனது பாக்கியம்.

ராமராஜன் என்னை காதலித்தார் என்று தொடக்கத்தில் இருந்து தெரியும். என்னுடன் அவர் பேசியதை எனது உதவியாளர் அம்மாவிடம் சொல்லிவிட்டார். அதனால் அவரை உறவினர்கள் அடித்தார்கள். எனக்காக அடியெல்லாம் வாங்குகிறார் என்று நானும் அந்த காதலில் உறுதியாக இருந்தேன்.

எனக்கு மேக் அப் போட உதவும் உதவியாளரிடம் ரூ. 10 பணம் கொடுத்து காதல் கடிதத்தை ராமஜான் கொடுத்துவிடுவார். அதை கழிப்பறையில் இருந்து வேகமாக படிப்பேன். இன்னும் அந்த கடிதங்களை பத்திரமாக வைத்திருக்கிறேன்.

நடிகர் ரத்தீஷுடன் மலையாள படத்தில் நடித்துக்கொண்டிருந்தேன். அந்த படத்தில் நடித்துகொண்டிருந்தபோதுதான் எனக்கு திருமணம் நடந்தது. படப்பிடிப்பின்போது புடவையை மாற்ற வேண்டும் என்று கூறிவிட்டு, காரில் ஏரிச் சென்றுவிட்டேன். கட்டியபுடவையுடன் எனது திருமணத்திற்கு சேன்றேன். ஒரு மாதம் வரை எங்களால் வீட்டுக்கு செல்ல முடியவில்லை. சென்னைக்கு வெளியேதான் சுற்றிக்கொண்டிருந்தோம்.

அப்போது அவரிடம் பணம் இல்லை. முக்காடு போட்டுக்கொண்டுதான் திருமணம் செய்துகொண்டேன். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் தலையிட்டுத்தான் எங்கள் திருமணத்தை நடத்தி வைத்தார். 13 வருட திருமணம் வாழ்க்கை மிகவும் நன்றாக இருந்தது. ஜாதகத்தின் மீதுள்ள நம்பிக்கையால்தான் அவர் என்னைவிட்டு பிரிந்தார். திருமணம் ஆகும்போதே, 4 ஆண்டில் பிரிந்து விடுவோம் என்று கூறினார். அதை 13 ஆண்டுகள் வரை இழுத்துபிடித்திருந்தேன். கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிடம் எனக்கு நல்ல நெருக்கம் இருந்தது.

நமக்காக உதவி வேண்டும் என்று கேட்டால்தான் உறவில் சிக்கல் வரும். நான் மற்றவர்களுக்காகத்தான் உதவி கேட்பேன். நாங்கள் கடனில் மூழ்கி இருந்தபோது, ஜெயலலிதா அவர்களிடம்தான் உதவிகேட்டேன். அவர் உதவி செய்தார்.

இரு குழந்தைகளுக்கு நான் திருமணம் செய்து வைத்தபோது,அந்த நிகழ்வில் பங்கெடுத்து சமந்திகளிடம், என்னை பற்றி அம்மா ஜெயலலிதா உயர்வாக பேசினார்” என்று அவர் கூறினார்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment