Advertisment

41 வயதில் முதல் குழந்தை: பிரக்னன்சி போட்டோ வெளியிட்ட 'பர்த்டே பேபி' நமிதா

Actress Namitha announces Pregnancy: இன்று பிறந்தநாள் கொண்டாடும் நமீதா தனது இன்ஸ்டாகிராமில் தனது பிரக்னன்சி போட்டோஷூட் புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Actress Namitha announces Pregnancy

தமிழில் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா திரைப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானர் நடிகை நமீதா. சிறந்த நடிப்பின் மூலம் பல இளைஞர்களை கவர்ந்த நமிதாவுக்கு, குறுகிய காலத்திலேயே ரசிகர் பட்டாளம் உருவானது. அவரை அனைவரையும் மச்சான் என செல்லாமாக அழைப்பதும் உண்டும்.

Advertisment

தமிழ் சினிமாவில் விஜய்,அஜித், சரத் குமார்போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார். பின்னர், பட வாய்ப்புகள் குறைந்திட தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக சில காலம் பயணித்தார்.

நவம்பர் 24, 2017 ஆம் ஆண்டு இந்தியத் திரைப்பட நடிகரான 'வீரேந்திர சௌத்ரி' என்பவரைத் திருமணம் செய்துக்கொண்டார் நமீதா.

இன்று 41ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நமிதா, தனது இன்ஸ்டாகிராமில் பிரக்னன்சி போட்டோஷூட் புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். பேபி பம்ப்பை காட்டி போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

புகைப்படத்திற்கு பதிவிட்ட நமிதா, "தாய்மை எனும் புதிய அத்தியாயம் தொடங்கியதும், எனக்குள் ஏதோ மாற்றம் வந்தது. மிகவும் மென்மையா இருக்கிறது. என் மீது பிரகாசமான மஞ்சள் சூரிய ஒளிப்பட, புதிய வாழ்க்கையும் புதிய உயிரினமும் என்னை அழைக்கின்றது. நான் எப்போதும் விரும்பியது உன்னை தான். உனக்காக நீண்ட நாள்களாக பிராத்தனை செய்து வந்தேன். உனது மென்மையான உதையும், படபடப்பும், என்னால் உணர முடிகிறது. இதுவரை இல்லாத ஒன்றை, என்னிடம் நீ உருவாக்கியுள்ளாய்" என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Namitha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment