scorecardresearch

சின்னத்திரையில் நுழையும் விஜய் ஹீரோயின்: சன் டிவி சீரியலில் கெஸ்ட் ரோல்!

Actress Nanditha swetha play guest role in Sun TV Abhiyum Naanum serial: சன் டிவி சீரியலில் நடிக்கும் விஜய் பட நடிகை நந்திதா ஸ்வேதா; அபியும் நானும் சீரியலில் கெஸ்ட் ரோலில் வருகிறார்.

சின்னத்திரையில் நுழையும் விஜய் ஹீரோயின்: சன் டிவி சீரியலில் கெஸ்ட் ரோல்!

சன் டிவி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு நடிக்க வருகிறார், விஜய் பட ஹீரோயின் நந்திதா ஸ்வேதா.

தமிழ் தொலைக்காட்சிகளில் சன் டிவி சீரியலுக்கு என்று தனி இடம் உண்டு. சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களே டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னிலை பெற்று வருகின்றன.

தற்போது சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களில் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்ற சீரியல் அபியும் நானும். இதில் ரியா மனோஜ், வித்யா மோகன், அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். குழந்தைகளின் அன்பை மையமாக கொண்ட இந்த சீரியலின் கதை தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், இந்த சீரியலில் திரைப்பட நடிகை நந்திதா ஸ்வேதா, கௌரவ தோற்றத்தில் நடிக்கவுள்ளார்.

நந்திதா ஸ்வேதா, அட்டக்கத்தி படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். பின்னர் எதிர்நீச்சல், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக நடிகர் விஜய்யுடன் புலி படத்திலும் நந்திதா நடித்துள்ளார்.

தற்போது இவர் சின்னத்திரையில் நடிக்கவுள்ளது, ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் சன் டிவியின் ஹிட் சீரியல்களில் ஒன்றான அபியும் நானும் சீரியலில் நடிப்பதால், ரசிகர்கள் அந்த எபிஷோடுகளை எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Actress nanditha swetha play guest role sun tv abhiyum naanum serial